என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு!

தனியாக

நான் பிரிவுத் துயரால் வாடினேன்!
நான் தன்னந்தனியளாய்விடப்பட்டிந்தேன்.
கூரைமேல் தனிமையாய் இருக்கும் பறவைபோல் ஆனேன்.

எசாயா49:21,திபா102:7

பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது.
ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார்.

மாற்கு 6:47

உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை
உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன்.
அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்.

யோவான் 14:16,17

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்.
உங்களிடம் திரும்பி வருவேன்.

யோவான் 14:18

அஞ்சாதே!
நான் உன்னுடன் இருக்கிறேன்!
கலங்காதே!
நான் உன் கடவுள்.

எசாயா 41:10

நான் உனக்கு வலிமை அளிப்பேன்!
உதவி செய்வேன்.

எசாயா 41:10

ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக.
இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்!
எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்.
தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்.

எபிரேயர்10:25. உரோமையர் 16:16

களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து
நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை.
உம் கை என்மேல் இருந்ததால்
நான் தனியனாய் இருந்தேன்.

எரேமியா 15:17

மக்களை அனுப்பிவிட்டு,
அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக
ஒரு மலையின்மேல் ஏறினார்.
பொழுது சாய்ந்தபிறகும்
அங்கே அவர் தனியே இருந்தார்.

மத்தேயு 14:23

என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார்.
அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை.
நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்.

யோவான் 8:29

நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது
உங்கள் உள்ளறைக்குச் சென்று,
கதவை அடைத்துக் கொண்டு
மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள்.

மத்தேயு 6:6

இதோ! உலக முடிவுவரை எந்நாளும்
நான் உங்களுடன் இருக்கிறேன்.

யோவான் 28:20

anbinmadal.org