சிலுவையும் ஒரு சிறகு தான்


அ.அல்போன்ஸ் - பெங்களுர்
corss

அருவியின் பயணம் 
ஆற்றை நோக்கி

ஆற்றின் பயணம் 
கடலை நோக்கி

கடலின் பயணம்
வானம் நோக்கி

கடவுளின் மைந்தன் பயணமோ
தந்தையை நோக்கி

தந்தையின் விருப்பமோ
கல்வாரி நோக்கி

இறை விருப்பம் 
வகுக்கப்பட்ட வியூகங்களில் 
பாடுகளின் விளிம்புதடவி
நெகிழ்ந்த அனுபவம் 
சிலுவை பாதை

சிலுவையே 
நீ கல்வாரி மலையில் 
நின்றபிறகுதான் 
இருண்ட ஆன்மாவிற்கு 
இயேசு எனும் ஒளி
சுள்ளென்று உரைத்தது

உன்னை ஊன்றினார்கள் 
பூமி வானத்தை 
உரசி எடுத்தது


 
உன்னில்
இயேசுவை அறைந்தார்கள் 
பூமி நடுங்கியது 
 
உன்னால் தான்
உயிர்ப்பு எங்களுக்கு
அறிமுகம் ஆனது
 
உயிர்விட்டபொழுது
நீ ஓரு சிறுகதை
நாட்பட நாட்பட
அனைவருக்கும் 
நீ ஒரு விடுகதை

சிலுவை சிந்திய
இயேசுவின் மொழிகள் 
உள்ளத்தை வருடியது

சிலுவை வழியே
மரணம் அழிந்தது
மானுடம் உயர்ந்தது

விசுவாசம் இல்லாதபோது
சிலுவை ஒரு சுமைதான்

நம்பிககைமட்டுமிருந்தால்
சிலுவையும் ஒரு சிறகு தான்...... 
3kings