பரிசுத்த தம திருத்துவம் பெருவிழா

முதலாம் வாசகம்
நீமொ.8:22-31

ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரேää என்னைப்படைத்தார். தொடக்கதில்ää ப10வுலகு உண்டாகுமுன்னேää நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்: பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. மலைகள் நிலைநாட்டப்படுமுன்னேää குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். அவர் ப10வுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னேää உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன். வானத்தை அவர் நிலைநிறுத்தினபோதுää கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோதுää நான் அங்கே இருந்தேன். உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோதுää ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோதுää நான் அங்கே இருந்தேன். அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோதுää ப10வுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோதுää நான் அவர் அருகில் அவருடைய சிற்பி இருந்தேன்: நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சிய10ட்டினேன்: எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். அவரது ப10வுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்: மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.

இரண்டாம் வாசகம்
உரோமை.5:1-5

ஆகையால் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம்ää நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்.நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது.அதுமட்டும் அல்லää துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில்ää துன்பத்தால் மன உறுதியும்ääமன உறுதியால் தகைமையும்ää தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம்.அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது: எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.

நற்செய்தி
யோவா 16:12-15

நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்: தாம் கேட்பதையே பேசுவார்: வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் "அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் " என்றேன்.