"ஒளியைத் தேடி" கவிதை


அ.அல்போன்ஸ் - பெங்களுர்


jesus at gethsemane
கதரோன் சிற்றோடை
சலசலவென ஒடியது

இரவு உணவுக்கு பின் 
ஓடையைத்தாண்டி
ஓலிவமலை ஏறி
கெத்சமேனி வனம் 
வந்தார் ஏசு

ஏசு சுதந்திரமானவர்
எவர் வீட்டு மாடியிலும் 
அவருக்கு இடம் உண்டு

தனிமையில் தவம் 
தந்தையுடன் ஜெபம் 
சீடர்கள் 
விண்ணரசின் 
வண்ணக் கனவுகளுடன்
ஆழ்ந்து உறங்கினார்கள்

கண்ணீராய் வியர்வையாய்
இரத்தமாய் சொற்களில்
சொல்லமுடியாத ஒர்
தெய்வீகமாய் பாத்திரம்
விலக பரமனிடம் வேண்டினார்

தந்தையின் விருப்பம் 
நிகழ்ந்தாக வேண்டும் 
தந்த பாத்திரம் 
குடித்தாக வேண்டும்

லாசர் உயிர்த்ததில் 
குருடர் பார்ததில்
ஆலயத்தில் அதிரடியாய் 
சவுக்கை எடுத்ததில்

எரிமலையாய் சதுசேயர்
எரிநட்சத்திரமாய் பரிசேயர்
எரிஈட்டிகளாய் தலைமை குருமார்கள் 

அன்னாஸ் கைப்பாஸ் 
நெற்றி புருவங்கள் 
நெளிந்து போகிற அளவுக்கு 
தாவீதின் மகனை 
சிந்தித்து சிந்தித்து
சீறிக் கெண்டிருந்தனர்

அன்னாஸ் இவன் ஓரு 
மகாபாரத சகுனி
தாயம் போடாமலே
காயை நகர்த்துபவன்

கைப்பாஸ் இவன் 
அன்னாஸின் மருமகன் 
கொல்ல துடிப்பது
இயேசு பெருமான்

விவிலிய மொழியில் 
இருவரும் 
விரியன் பாம்பின் குட்டிகள்

யூதாஸ் இவர்களின் துரோக 
வலையில் வீழ்ந்திருந்தான்
பகலில் பிடித்தால் மக்கள் புரட்சி
இரவுக்காக விழித்திருந்தனர்
யூதாசும் வீரர்களும் 
ரகசியமாய் அந்த 
அதிசயத்தை பிடிக்க

ஆக சகிதமாய் 
அறநூறு வீரர்களோடு
ஒரு குறும் படை கூடவர
வழி நடத்தி வந்தான் 
வஞ்சக யூதாஸ்

ஆயனைப் பிடிக்க
ஆட்டுத்தோல் போர்த்திய 
ஓநாய்கள் - கைகளில்
விளக்கேந்தி
இரவோடு இரவாக
உலகின் ஒளியை 
பிடிக்க வந்தனர்


கிதரோன் ஓடை அலறியது
காட்டு குயில்கள் கத்தின
மரச் சருகுகள் எச்சரித்தன
முயல் குட்டிகள் பதைபதைத்தன

காலடி ஒசைகள் 
அருகில் வரவர

ஒருபுல்லின் மீது
பனித்துளி இறங்குவது போல்
மலைக்குன்றின் மீதிருந்து
இயேசு இறங்கிவந்தார்

முத்தமிட்டான் யூதாஸ்
மௌனமாய் எதிரொலித்தது
ஓலிவமலை எங்கும் 

இயேசுவின் முகத்தில் இரக்கம் 
யூதாஸின் முகத்தில் இறுக்கம்
ஆச்சிரியந்தான் 
ஒளியை முத்தமிட்டது
இருள் 

இயேசுவின் இதயத்தில் 
முதல் முள்கிரிடம் - இந்த
முத்தம் தான்
முத்தத்தின் விலை 
முப்பது வெள்ளிகாசுகள் 

யாரைத் தேடுகிறீர்கள் 
நாசரேத்தூர் இயேசுவை

வாழ்வு தரும் வார்த்தைக் கேட்டு
பூகம்பம் வந்ததது போல் 
பூமியில் விழுந்தனர் வீரர்கள்

தாவீதை காட்டி கொடுக்க நினைத்த
அகத்தேப் என்று 
சாமுவேல் ஆகமம் 
வாசித்தது

தாவீதின் மகனுக்கு
யூதாஸ் என்பதை 
நான்கு நற்செய்திகளும் 
எட்டு திசைகளில்
ஏதிரொலித்து

சீடர்கள் சிதறி ஓடினர்
ஓடின ஆடுகள்
எங்கே என்பதை 
விவிலிய பக்கங்கள்
எங்கும் காணவில்லை

ஞாயிறு காலை
கோவேறு கழுதை மீது
யூதர்கள் ராஜாவாக வழியெங்கும் 
வாழ்க்தொலிக்க
கோலாகல ஊர்வலம் 

வியாழன் இரவு
கைதிபோல்
கைகளை இறுக கட்டி
ராஜ துரோகியாக 
இழுத்து சென்றனர்

இரவோடு இரவாக 
இரக்கம் இல்லாமல்

இதயமே வலிக்கிறதே

இந்த பாடுகளுக்கு 
காரணம் உண்மையில் நம்
பாவங்கள்தான் 
என்பது
பொய்யின் நிழல்படாத
நிஜம்

கிதரோன் ஓடை 
மென்மையாக
தண்மையாக 
கண்ணீரோடு 
ஓடிக்கொண்டிருக்கிறது....

Jesus-Betrayal