உயிர்ப்பும் உயிரும் நானே- கிறிஸ்து

அல்போன்ஸ் - பெங்களுர்

all souls day மனித உருவில் வந்த தெய்வம். தன்னை வாழ்வளிக்கும் உயிருள்ள நீர் என்றும் “உலகின் ஒளி” என்றும் கூறியவர். லாசரை உயிர்ப்பிக்கும் முன்பு மரியாளின் சகோதரி மர்த்தாளிடம் “உயிர்ப்பும் உயிரும் நானே” என்று தன்னை வெளிப்படுத்துகின்றார் உயிர்காக்கும் உண்மையான நற்செய்தி இது. ஆதியாகமத்தின் முதல் வரிகளிலே ‘உயிர் ஒன்று ஆவியாக நீரில் அசைந்தாடிக் கொண்டிருப்பதைக்; காண்கின்றோம். அந்த உயிர் உயிர்ப்பாக உலகமாக விரிவதை ஒவ்வொரு நாளாக மலர்ந்து வருவதையும் பார்க்கின்றோம். அது ஒளியாகி. வானாகி, மண்ணாகி, மரமாகி முடிவில் தன் ஆவியால் மனிதனுமாகி படைப்பு நிறைவடைவதை ஆறு நாட்களில் காண்கின்றோம்.

இதை ஒரே வரியில் யோவான் தெளிவாக கூறுகின்றார் “அவர்வழியாக அனைத்தும் உண்டானது” (1:3) கடவுளிடம் உயிர் உயிர்ப்பாகின்றதை பரம்பொருளின் பரிணாம வளர்ச்சியை தெளிவாக்குகின்றது. அது சரி…! ஆனல் மீளவும் யோவான் அடுத்தவரியில் ‘உண்டானதெதுவும் அவராலேயன்றி உண்டாகவில்லை’ என்று மறுமுறையும் எதிர் மறையில் கூறுவதன் பொருள் என்ன? அவர் வழியாக அனைத்தும் உண்டாயின என்பதை உடன் பாட்டில் சொன்னவர் அவராலேயன்றி உண்டாகவில்லை என்று எதிர் மறையில் ஏன் சொல்லுகின்றார். இரண்டுமே ஒரே அர்த்தம் கொண்டது தானே… …

பழைய ஏற்பாட்டில் பார்க்கலாம். எருசலேம் ஆலயம் கட்டிய பின்பு அதில் கடவுள் (யாவே) மட்டும் நுழையவில்லை. அதில் வாக்குத்தத்தின் பெட்டகமும் பரிசுத்த இடத்தில் வைக்கப்பட்டது ஏனெனில் பாலைவனப் பயணத்தின் பொழுது அதில் கடவுளின் பிரசன்னம் இருந்தது. பெட்டகம் ஆலயத்திற்குள் நுழையும் பொழுது சங்கீதம் 132:8 பாடுகின்றது. “ஆண்டவரே நீர் உமது வல்லமை விளங்கும் பேழையுடன் உமது உறைவிடத்திற்கு எழுந்தருள்வீராக.”

ஆகஸ்டு 15-ல் அன்னைமரி என்னும் வாக்குத்தத்தின் பெட்டகம் விண்ணகத்தில் நுழைகின்றது. அழிவுக்குரிய உடல் அழியாமையை அணிந்துகொள்கிறது. ஆவியின் வல்லமையில் உயிர் மூச்சு புகச்செய்து உயிர் பெற்றதை எசேக்கியேல் ஆகமம் எசப்பட்டாக பாடுவதை கேட்கின்றோம் . எலும்புத் துண்டுகள் புதிய வாழ்வை பெறுகின்றன. இறந்துபோய் மண் புழுதியில் உறங்குகின்றவர்களில் பலர் விழித்துதெழுவார்.அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர் என்று தானியோல் ஆகமம் (12:2) ராகமாகப் பாடுகின்றது. எனவே உடல் வாழ்வு பெரிதாய் மதிக்கப்பட வாழவேண்டும்: அனைத்தையும் எதிர் வரும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்

விவிலியத்தில் ஒரு காட்சி யோவான் வெகு அழகாக காட்டுகின்றார்.இலாசர் இறந்ததை கேட்டு இயேசு அங்கு வந்த பொழுது இலாசரை கல்லரையில் வைத்து ஏற்கனவே நான்கு நாட்கள் ஆகியிருந்தது. இயேசு வந்திருப்பதைப்பதை கண்டு மரியாள் அவரை எதிர் கொண்டு போனாள். இயேசு அவரை நோக்கி உன் சகோதரன் உயிர்த்தெழுவான் என்றார்.
அதற்கு முன்னமேயே சீடர்களிடம் ‘நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்: அவனை தூக்கத்திலிருந்து எழுப்பச் செல்கிறேன் என்றார். இயேசு இலாசரை நிச்சியமாக உயிர்ப்பிக்கப் போகின்றார் என்பதை தெரிந்து கொள்றோம் ஆயினும் இயேசு மரியாள் அழுவதையும் அவளோடு வந்த யூதர் அழுவதையும் கண்டபொழுது தானும் மனம் குமுறி கலங்கி அவனை எங்கே வைத்தீர்கள் என்று கேட்கின்றார். இயேசு கண்ணீர் விட்டார். அதை கண்ட யூதர்கள் ‘அவன் மேல் இவருக்கு எவ்வளவு நேசம் பாருங்கள்’ என்றனர்.
இயேசு மீண்டும் மனம் குமுறியவராய்க் கல்லறைக்குச் சென்றார்.

இது வெகு விசித்திரமாக இருக்கின்றது.இலாசரை நிச்சியமாக உயிர்ப்பிக்கப் போகின்றவர் எல்லாருக்கும் முன்பு அதிசயத்தை நிகழ்த்தப்போகின்றவர். அந்நேரம் வரையிலும் மற்றவர்களோடு இயேசுவும் கண்ணீர் விட்டு மனம் குமுறி அழுகின்றார். திருவிவிலியம் இதை ஒரு தடவை மட்டும் கூறவில்லை ‘இயேசு மனம் குமுறி அழுதார் என்று இரண்டு தடவை குறிப்பிடிருப்பதையும் காண்கின்றோம் (யோ. 11 33,38)
ஏன் அழுதார் ஆச்சரியம் தான்.
நம் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் அதை கண்டு அழுபவர்கள் தான். மரியாள், மார்த்தாள், சுற்றிநின்றவர்கள் இலாசர் இறந்ததற்காக் அழுதனர் .
இயேசுவும் அழுகின்றாரே?
பிழைக்க வைக்க போகின்றவர் அழுகின்றாரே என்ன காரணம்?
உடல் அழியக்கூடியது தான் ஆனலும் உலகில் மக்கள் உள்ளத்தில் கொண்ட பாசமும் கொண்டு மரணத்தின் பொழுது அழும் பொழுது அந்த உலகியலில் ஒட்டி மற்றவர்களைப்போல் தானும் உலக வாழ்க்கையை மேற்கொள்கின்றார்.
இந்த வாழ்க்கை கடவுளால் கொடுக்கப்பட்ட வெகுமதி, எதையும துறப்பதல்ல வாழ்க்கையின் மீது அன்பு கொள்ள வேண்டும். வாழ்க்கை முழுமையாக தெய்வீக உணர்வுடன் பார்க்க வேண்டும். தனக்கு வேண்டாதது பிடிக்காதது வரும் பொழுது தப்பி ஒடும் முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.
எல்லாமே தெய்வீகமானது தான் .எல்லாவற்றையும் நேசிக்க வேண்டும். விருப்பு வெறுப்பற்ற வாழ்வு என்பது, எது எப்படி இறக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது மற்றவர்கள் அழும்பொழுது அவர்கள் துயரத்தில் இயேசு பங்கு கொண்டு அழுததுபோல் வாழ்வில் பிறரோடு பங்குகொள்ள வேண்டும். நாம் எதையும் சரியாக தேர்தெடுப்பவர்கள் அல்ல நாம் எவ்வளவுதான் விரும்பி தேர்தெடுத்தாலும் அதிலும் விருப்படாத விஷயம் அங்கே இருந்து கொண்டுதான் இருக்கும். அந்த பகுதியை விரும்பாததால் நாம் அறைகுறையாகவே இருக்கிறோம். எனவே உடல் வாழ்க்கையிலும் நாம் விரும்பாததை முழுமையாக ஏற்றுக் கொள்வோம். இதோ இறையரசு உம் கைகளிலே என்று இயேசு கூறுவதும் இதைத்தான். முழுமையாக ஏற்றுக் கொள்வது வாழ்வின் மிகவும் உயிரோட்டமான வழியாகும்.

அன்னை மரியாள் தன் வாழ்வில் அனைத்தையும் முழுமையாக ‘இதோ உம் அடிமை’ என்று ஏற்றுக் கொண்டாள். விண்ணக வாழ்விலும் அவள் உடல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அன்னை மரியின் தேவ ஆவிக்குரிய உயிர் கொண்டு உடலுடன் விண்ணகம் சென்றாள். மரியாளின் விண்ணேற்பு அவள் எடுத்துக்கொண்ட இறையரசு பணியில் நிறைவு பெற்றதாக கடவுளில் ஐக்கிய நிலை உற்றதாக காண்கின்றோம் .இயேசு தெளிவாகக் கூறினார் “உயிர்ப்பும் உயிரும் நானே’ என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான். உயிர் வாழ்க்கையில் என்னில் விசுவாசம் கொள்பவன் ஒருபோதும் சாகான்” (யோ 11: 25)


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு


sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com