மானுட தேவதை - அன்னை தெரேசா.

திரு. எம்.எம். லூயிஸ் - விருகம்பாக்கம் - சென்னை

முன்னுரை

mother teresaஅருளரசி - அன்பின் நாயகி அன்னை தெரேசா. அந்த மானுட தேவதையின் மகத்தான வரலாற்றுக் காவியத்திலிருந்து வரிகள் சில எடுத்து குறுநாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறோம்.

கல்கத்தா பெருநகர நகரின் நடைபாதைகளிலும் நாற்றமெடுத்த சேரிகளிலும் மாரிக்காலத்து ஈசல்களாக மடிந்து கொண்டிருந்த அநாதைகள் - தொழுநோயின் தாக்கத்தால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருந்தவர்கள் என்புருக்கி நோயின் கொடுமையால் துன்புற்றுத் துடித்துக் கொண்டிருந்தவர்கள் குப்பைத்தொட்டிகளில் எறியப்பட்டு குற்றுயிராய்க்கிடந்த குழந்தைகள் இவர்களில் கிறிஸ்து இயேசுவையே அன்னை தெரேசா கண்டார் என்பதும் அவதியுற்றோரக்கு ஆறுதலைத் தரும் அரும்பணியில் தம்மை அவர முழுமையாய் அரப்பணித்துக் கொண்டார் என்பதும் அகிலம் அறிந்த ஒன்றே.

மனித இனத்திற்காக மனமுவந்து உதவுவதுதான் மறைபணி. இதயங்களை அன்பு செய்வதுதான் இறைவனை அன்பு செய்வது என வாழ்ந்த வாழ்க்கையால் வாய்மொழி வாரத்தைகளால் வையகத்திற்குச் சொன்னவர் அன்னை சமுதாயத்தில் மண்டிக் கிடந்த வறுமை என்ற இருளை அகற்ற அன்பு எனும் பந்தத்தை உயரத்திப் பிடித்து சீர இழந்து கிடந்த பாதையைச் சேவை மனப்பான்மையால் செப்பனிட முன் வந்த அன்னையிடம் பன்னிருவரால் எழுப்பப்பட்ட வினாக்களையும் அன்னை இறுத்த விடைகளையும் தொகுத்தளிக்க முனைந்திருக்கும் இந்த முயற்சி ஓரளவேனும் அன்னையை அடையாளம் காட்டும் என்றே நம்புகிறோம்... இப்போது நாம் காட்சிக்குள் நுழைவோமா...?


காட்சி - 1

இடம்: அன்னையின் இல்லம்

பாத்திரங்கள்: அன்னை - அருட்சகோதரி - பேட்டி காண வந்தவர்கள் (12 பேர்கள்)

நிலைமை: அன்னை நடந்து வருகிறார். உடன் சில சகோதரிகள். பேட்டிகாண வந்தவர்கள் எழுந்து நிற்கிறார்கள்.

அன்னை:God bless you all. வணக்கம் வணக்கம். ஆரம்பிக்கலாமா? Shall we start?
நிருபர்-1:(எழுந்து நின்று) Mother!
அன்னை:Please sit. Please sit and ask.
நிருபர்-2: I am Peter Armstrong from USA. Are you saint Mother?
அன்னை:Please let me die first brother. (அனைவரும் சிரிக்கிறாரகள்)
நிருபர்-3:உங்களை வாழும் புனிதை (Living Saint) என்று அழைக்கிறார்களே. அதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?
அன்னை:என்னில் இயேசுவை காணுகிறீர்கள் என்றால் எனக்கு மகிழ்ச்சி. நான் உங்களில் இயேசுவை காணுகிறேன். புனிதத்தன்மை எல்லாருக்கும் பொதுவானது. அது உங்களுக்கும் கூட பொருந்தும். You too can be a living saint right?
நிருபர்-3:உலகில் ஏழைகளே இல்லாமல் போனால் என்னவாகும்?
அன்னை:எங்களுக்கு வேலையே இல்லாமல் போகும்.
நிருபர்-4:உலகிலுள்ள அத்தனை பேருக்கும் நீங்கள் உதவிட முடியும் என்று எண்ணுகிறீர்களா?
அன்னை:முடியாத ஒன்று தான். எங்கள் சேவை மகாசமுத்திரத்தில் கலக்கும் ஒரு துளி நீர். இந்த ஒருதுளி அந்த கடலில் கலக்காமல் போனால் ஒருதுளி அளவிற்கு கடல்நீர் குறையத்தானே செய்யும். Do you agree?
நிருபர்-5:உங்களுடைய முக்கிய தேவை பணம் தானே?
அன்னை:நாங்கள் எங்கள் பொருளாதார தேவைகளுக்கு இறைசித்தத்தை சாரந்திருக்கிறோம். பூக்கள் புற்கள் பறவைகளைவிட நாம் மேலானவர்கள் என்கிறார் கிறிஸ்து இயேசு. உண்பதற்கு உணவில்லை தங்குவதற்கு இடமில்லை என்ற காரணங்களால் இங்கிருந்து எவரும் வெளியே அனுப்பப்படவில்லை. மிக முக்கியத் தேவைகளாக நான் கருதுவது எங்கள் ஏழைகளுக்கு அன்பு செய்யும் இதயங்களையும் பணி செய்யும் கரங்களையும் தான் பணம் அல்ல.
நிருபர்-6:ஒரு மெழுகுவரத்தி ஏற்றக்கூட திராணியற்றவரான உங்களால் ஒரு சபையை தொடங்க முடியாது என்று கூறப்பட்ட போது என்ன எண்ணம் உங்கள் மனதில் தோன்றியது?
அன்னை:அது உண்மைதான் என்ற எண்ணம் என்னால் கூடாதுதான். ஆனால் என்னோடு உள்ள இறைவனால் கூடுமே.
நிருபர்-7:My name is நவீன் சால்வா அம்மா! நீங்கள் தானே உலகத்திலேயே சக்தி வாய்ந்த பெண்மணி?
அன்னை:No, Not at all.. அப்படி இருந்திருந்தால் உலகமெல்லாம் அமைதியை ஏற்படுத்தியிருப்பேனே
நிருபர்-8:நோபல் பரிசு பெற நீங்கள் தகுதி படைத்தவர் என்பதை ஒப்புக்கொள்கிறீரகளா?
அன்னை:மாட்டேன். அதற்கு நான் முற்றிலும் தகுதியற்றவள். ஏழைகள் இருப்பதை உலகம் உணரத் தொடங்கிவிட்டது. ஏழைகளின் பிரதிநிதியாக என்னைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வளவே! That is all.
நிருபர்-9:அம்மா! மறக்கமுடியாத நிகழ்ச்சி ஏதாவது ஒன்று சொல்லுங்கள்.
அன்னை:Yes. There are so many one of the incidents. In the year. 1984 ரோமை மாநகர தூய பேதுரு சதுக்கத்தில் திருதந்தையவர்கள் புத்தாண்டு திருப்பலியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். நானும் எங்கள் அன்பின் பணியாளர சபை சகோதரிகள் சிலரும் திருப்பலியில் பங்கேற்றிருக்கின்றோம். திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. நான் சகோதரிகளிடம் சொன்னேன். மழை நிற்க வேண்டுமென்று தேவதாயிடம் மிகவும் இரக்கமுள்ள தாயே என்ற ஜெபத்தை ஒன்பது முறை சொல்லுவோம் என்று. இரண்டாவது முறையாக நாங்கள் ஜெபத்தை சொன்னபோது மழை மிக வேகமாகப் பிடித்துக்கொண்டுவிட்டது. தொடரந்து ஜெபித்தோம். நாங்கள் எட்டாவது முறையாக ஜெபத்தை சொல்லிக்கொண்டிருந்த போது எல்லாரின் குடைகளும் மடக்கப்பட்டுவிட்டன. அது எங்களுக்குத் தெரியாது. ஓன்பதாவது முறையாக ஜெபத்தை முடித்துவிட்டு நிமிர்கிறோம். மழை நின்றுபோயிருக்கிறது. ஜெபத்தில் ஆழ்ந்திருந்த எங்கள் குடைகள் மட்டும் இன்னும் மடக்கப்படாமலிருக்கின்றன.
பெண் நிருபர்-10:பலரின் திருமண உறவில் விரிசல் ஏற்படுகிறது. அதற்கு என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள்?
அன்னை:எப்போதும் இதற்கு என்விடை இதுதான். ஜெபியுங்கள் மன்னியுங்கள்.
நிருபர்-11:அம்மா ஒரு நாளில் நூற்றுக்கணக்கான கடிதங்களைப் படிப்பது பதில் எழுதுவது வேலைகளை திட்டமிடுவது பிறர் சந்தேகங்களுக்கு விளக்கம் தருவது இத்தனை வேலைகளுக்கு மத்தியில் தூங்குவதற்கு நேரம் கிடைக்கிறதா உங்களுக்கு?
அன்னை:கிடைக்கிறதே. நான் உங்களைப் போல் நிதானமாக தூங்குவது இல்லை. நான் வேகமாக தூங்குகிறேன்.
நிருபர்-12:நீங்கள் ஒரு வறுமையின் கவரச்சிக்கன்னி Glamour Girl of poverty என்று ஜெரமேன் க்ரியர என்ற பெண்மணி ஒருமுறை குறிப்பிட்டார். அது உங்கள் கோபத்தை தூண்டவில்லையா?
அன்னை:இல்லை. அது அவருக்காக ஜெபிக்க தூண்டியது என்னை.
நிருபர்-3:உங்கள் அன்புப்பணி உள்நோக்கம் கொண்டது. நீங்கள் மதமாற்றம் செய்கிறீர்கள் - சரியா?
அன்னை:ஓரளவில் சரி. மதமாற்றம் என்பதற்கு பதிலாக மனமாற்றம் என்று சொல்லியிருந்தால் மிகவும் பொருந்துவதாக இருக்கும். யாரிடமும் நாங்கள் மதமாற்றம் பற்றி பேசுவதில்லை. எந்த மதத்தவரிலும் நாங்கள் கிறிஸ்து இயேசுவையே தரிசிக்கின்றோம். அவரகளின் பெயர் பிறப்பிடம் முன்வரலாறு எவற்றையும் தெரிந்துகொள்ள முற்படாமல் தான் பணிவிடை செய்கிறோம். அவர்களாக முன்வந்து மனம் மாறும் போது வரவேற்கிறோம்.
சகோதரி:துறவற வாழ்க்கை வாழும் என்போன்றோருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அன்னை:ஏழ்மைக்கும் நற்கருணைக்கும் ஏழைகளுக்கும் உண்மை உள்ளவரகளாயிருக்க வேண்டும். தலைவனோடு மரணத்தை பகிரந்து கொள்ளும் ஓர் உண்மை போர்வீரனின் மனநிலையை அதுதான் கிறிஸ்துவின் மனநிலை. அத்தகைய மனநிலையை ஒரு துறவி கொண்டிருக்க வேண்டும். இறைவன் என்னை பயன்படுத்தலாம் பயன்படுத்தாது போகலாம். எங்கே எவ்விதம் நம்மை வைத்திருக்க அவருக்கு விருப்பமோ அந்த விருப்பத்திற்கு முற்றும் முழுவதுமாய் நம்மைக் கையளிக்க வேண்டும்.
சகோதரி:அடிக்கடி உங்கள் காதுகளில் ஒலிக்கும் இறைவார்த்தைகள் எவை என்று தெரிந்து கொள்ளலாமா?
அன்னை:Why not. நான்தான் உங்களை தேர்ந்து கொண்டேன். நீங்கள் என்னை தேரந்து கொள்ளவில்லை என்ற கிறிஸ்து இயேசுவின் வார்த்தைகள். அழைப்பும் - அதை நிறைவேற்றும் அருளும் இறைவனிடமிருந்தே வருகின்றன.
நிருபர்-6:பணம் படைத்த செல்வந்தரகளுக்கு என்ன சொல்லுவீர்கள்?
அன்னை:பகிர்ந்து கொடுப்பதில் களைப்படையாதீர்கள் என்று சொல்லுவேன். ஆனால் மிச்ச மீதியை கொடுக்காதீர்கள் என்றும் சொல்லுவேன். உங்களை வருத்தும் வரை கொடுங்கள். எவ்வளவிற்கு அதிகமாக சேமிக்கிறீர்களோ அவ்வளவு குறைவாகத்தான் நீங்கள் கொடுக்க முடியும். நீங்கள் எவ்வளவு குறைவாக வைத்திருக்கிறீர்களோ அவ்வளவிற்கு அதிகமாக பகிர்ந்து கொள்ள முடியும். இறைவனிடம் ஏதேனும் ஒன்றை கேட்டுப்பெறும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் அது தாராள குணமாக இருக்கட்டும்.
பெண் நோயாளிஅம்மா வாத நோயால் நடக்க முடியாத என் போன்றவர்களால் யாருக்குத்தான் என்ன பயன்?
அன்னை:என்னம்மா இப்படி சொல்றே! செய்கின்ற பணிகளாலோ அல்லது கொடுக்கின்ற நன்கொடைகளாலோ மட்டுமல்ல படும் வேதனைகளாலும் பிறருக்கு நாம் உதவிட முடியும். இதைத்தான் நான் பயன் நிறைந்த துன்பம் என்று குறிப்பிடுவேன். எழுந்தே நிற்க முடியாத நிலையில் நீ ஊனமுற்றிருந்தாலும் உன்னை பயனற்றவள் உதவாக்கரை என்று எண்ணிவிடாதே. உயர்ந்த கருத்துக்களுக்காக நீ உன் துன்பங்களை அர்ப்பணித்து மகத்தான சாதனைகளை செய்துவிட முடியும். Please – Please don’t get discouraged.
சகோதரி:மன்னிப்பதா? மன்னிப்பு கேட்பதா? எது கடினம்?
அன்னை:மன்னிப்பதற்கு அதிக அன்பு தேவைப்படுகிறது. மன்னிப்பு கேட்க அதைவிட அதிகமாக தாழ்ச்சி தேவை.
நிருபர்-9:உங்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அம்மா?
அன்னை:கழுதையின் கால்களுக்கு கீழே கம்பளம் விரிக்கப்பட்டிருக்கிறது என்றால் அது கழுதைமேல் அமரந்திருக்கும் எஜமானனுக்காக கழுதை அதில் கரவம் கொள்ள முடியாது. இறையன்பு என்னும் நீரை ஏந்திச்செல்ல எல்லாரையும் போல் நான் ஒரு நீர்க்குழாய். அதற்காக குழாய் பெருமைப்பட தேவையில்லை. எஜமானனை சுமக்கும் ஒரு கழுதையாக நீரை கொண்டு செல்லும் ஒரு குழாயாக என்னை நான் கருதுகிறேன்.
பெண் நிருபர்-2: குடும்ப வாழ்வில் நாங்கள் மறக்கக்கூடாத ஒன்றைச் சொல்லுவீரகளா?
அன்னை:சொல்லலாமே... Smile at each other. மனைவி கணவனைப் பாரத்து கணவன் மனைவியைப் பாரத்து இன்முகத்துடன் புன்முறுவல் எப்போதும் செய்ய வேண்டும்.
நிருபர்-1:நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் தான் உங்களால் இப்படி சொல்லமுடிகிறது.
அன்னை:Who said that, நான் திருமணம் செய்துக்கொண்டிருக்கிறேன் - இயேசுவை. Yes. நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மைதான். நான் அவரைப் பாரத்து கொஞ்சம் சிரித்தால் கூட அவர என்னிடம் நிறைய எதிரபார்க்கிறார். OK. OK.. நிறைய வேலைகள் இருக்கிறது. Shall we windup with this. Thank you everybody bless you all. Thank you.

முதல் காட்சி நிறைவுப் பெற்றது.



காட்சி - 2

இடம்: அன்னையின் இல்லம்
பாத்திரங்கள்: அன்னை தெரேசா, அருட்சகோதரி நிர்மல், பல குழந்தைகள்
நிலை: பாடல் ஒலிக்கிறது. அன்னை குழந்தையோடு ஆடிப்பாடுகிறார்.
பின்குரல்: இத்தகைய குழந்தைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்ளும் எவனும் என்னையன்று என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான்.
மாற்கு நற்செய்தி: 9-ம் அதிகாரம் திருவசனங்கள்: 36 மற்றும் 37
இயேசுவோ அவர்களை அழைத்து குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் தடுக்க வேண்டாம். ஏனெனில் கடவுளின் அரசு இத்தகையோரதே. உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். கடவுளின் அரசைக் குழந்தைபோல ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது என்றார்.
லூக்க நற்செய்தி: 18-ம் அதிகாரம் திருவசனங்கள் : 16 மற்றும் 17.
அன்னை தெரேசா களங்கமற்ற குழந்தை மனம் கொண்டிருந்தார். குழந்தைகளோடு குழந்தையாகி குதூகலித்து மகிழ்ந்தது மட்டுமன்றி தன் உடன் உழைப்பாளரகளோடும் உவகை பொங்க ஓடியாடினார். நல்லுறவால் அவர்களோடு ஒன்றித்திருந்த அன்னை ஜெபத்தின் வழியாய் நாதன் இயேசுவின் அன்பில் இணைந்திருந்தார். அன்னையால் அவர்தம் வாழ்வில் கடைபிடிக்கப்பட்டதும் அவரின் உதடுகளால் வெகுவாய் உச்சரிக்கப்பட்டதும் அமைதிக்கான நோபெல் பரிசினை பெற்ற நாளில் அன்னையால் அச்சிடப்பட்டு அக்களிப்பாக அனைவருக்கும் தரப்பட்டதும் அசிசிப் புனிதரின் இந்த அமைதி ஜெபம் தான்.

காட்சி - 3


இடம் :அன்னையின் இல்லம்
பாத்திரங்கள் : அன்னை தெரேசா, அருட்சகோதரி நிர்மல், லாரி டிரைவர்்.
நிலை: திருச்சிலுவை படத்தின் முன் அன்னை முழந்தாளிட்டிருக்கிறார். அசிசியாரின் ஜெபம் பாடலாக ஒலிக்கிறது.
ஆண்டவரே உமது சமாதானத்தின் கருவியாக என்னை ஆக்கியருளும் / எங்கு பகை உள்ளதோ/ அங்கு அன்பையும் / எங்கு மனவருத்தம் உள்ளதோ அங்கு மன்னிப்பையும் / எங்கு சந்தோஷம் உள்ளதோ அங்கு நம்பிக்கையும் /எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும் / எங்கு துன்பம் உள்ளதோ அங்கு இன்பத்தையும் நான் பரப்ப அருள்தாரும். நான் என் ஆறுதலுக்காக அலைவதை விட்டு / ஆறுதலைக் கொடுக்க உழைப்பேனாக /என்னை மற்றோர புரிந்துகொள்ள வேண்டும் என்று நடப்பதை விட்டு / மற்றவர்களை புரிந்து கொள்ள உழைப்பேனாக. /என்னை மற்றவர்கள் நேசிக்க வேண்டும் என்று தவிப்பதை விட்டு / மற்றவர்கள் நேசிக்க முற்படுவேனாக. ஏனெனில் கொடுப்பதன் மூலம் தான் பெற்றுக்கொள்ள முடியும். மன்னிப்பதன் மூலம் தான் மன்னிப்படைய முடியும். சாவதின் மூலம் தான் முடியாத வாழ்வில் பிறக்க முடியும்.
அன்னை (பாடல் முடிவில்) ஓ தெய்வீக குருவே!
தேற்றுவதைவிட தேற்றப்படுவதையும்
புரிந்துகொள்ளுவதைவிட புரிந்துகொள்ளப்படுவதையும் -
நேசிப்பதைவிட நேசிக்கப்படுவதையும் -
நான் நாடாமல் இருக்க அருள்தாரும்.
ஏனெனில்
கொடுப்பதால் தான் பெற்றுக்கொள்கிறோம்
மன்னிப்பதால்தான் மன்னிப்பு பெறுகிறோம்
இறப்பதால்தான் முடிவில்லா வாழ்வுக்கு பிறக்கின்றோம்.

சகோதரி நிர்மல்: மதர் மன்னிக்கனும்.
அன்னை: Yes, சொல் நிர்மல் Tell me
சகோதரி நிர்மல்:நிறையபேருக்கு இன்னைக்கு காலை சாப்பாடு இல்லாம போயிடும் போலிருக்கு Mother
அன்னை: நிறைய பேரனா? for how many persons? எத்தனை பேருக்கு இருக்காது?
சகோதரி நிர்மல்: ஒரு இரண்டாயிரம் பேருக்கு
அன்னை: How this has happened? It is OK- It is OK (சிந்திக்கிறார்) கானாவூர் கல்யாணத்தை நினைச்சிப் பாரக்கிறேன். You there is a person to help us. மாதா இருக்கிறாங்களே நமக்கு. We ask her அவர்களையே கேட்போம். What you say? நீயும் என்கூட சேரந்து கேளு - Come on.

இருவரும் முழந்தாளிடுகிறார்கள். மிகவும் இரக்கமுள்ள தாயே ஜெபம் பாடலாக ஒலிக்கிறது.
இருவரும் ஜென்ம மாசில்லாமல் உற்பவித்த அரச்சிஷ்ட மரியாயே பாவிகளுக்கு அடைக்கலமே இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை மன்றாடும். ஆமென்.

டிரைவர்:மாதாஜி! மாதாஜி! மாப் கீஜியே மாதாஜி
அன்னை:Yes என்னப்பா
டிரைவர்:மா! மைம் ஜுவன்லால் ஹும். லாரி டிரைவர் ஒரு full truck load ரொட்டியும் பாலும் லாரியிலே எடுத்துக்கிட்டு வந்திருக்கேம்மா. உங்களுக்குத்தான் தெரியுமே வழக்கமா எல்லா ஸ்கூல் பிள்ளைகளுக்கும் காலையிலே ரொட்டியும் பாலும் சர்க்காரலேயிருந்து சப்ளை பண்ணுறது. என்னமோ தெரியலே இன்னிக்கு பார்த்து எல்லா ஸ்கூலுக்கும் லீவாம். அதனாலே எல்லாத்தையும் இங்க கொண்டுவந்து தரச்சொல்லி எனக்கு ஆர்டர். எடுத்திட்டு வந்திருக்கேம்மா.
அன்னை:ஏம்பா இன்னைக்கி ஸ்கூல் லீவு?
டிரைவர்:அதுதான் எனக்கே தெரியலம்மா
அன்னை:எங்க பிள்ளைகளுக்கு சாப்பாடு போடனும்னு கடவுள் எல்லா ஸ்கூலுக்கும் லீவு கொடுத்திட்டாரு. Right Thank you Lord. Thank you Mother நிர்மல்! Our Prayer is heard. நன்றி சொல்லனும். உம் ... நன்றி சொல்லனும். You can go. நீ செய்ய வேண்டியதைக் கவனி. (டிரைவர் பார்த்து) தேங்க்யுப்பா
டிரைவர் (சல்யுட் செய்த படி) சுக்ரியா பஹீத் சுக்ரியாம்மா

பின்குரல் : எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல் மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் தெரிவியுங்கள். அப்பொழுது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனதையும் பாதுகாக்கும். பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம். ஆதிகாரம் 4 திருவசனங்கள்: 6 மற்றும் 7 இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப் பெருக அவர்கள் கடவுளுக்கு செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றி புகழப்படுவார். 2கொரி.4:15



காட்சி - 4

இடம்: குடிசை

பாத்திரங்கள்: அன்னை, இந்து பெண்மணி, முஸ்லீம் பெண்மணி

நிலை: இந்து பெண்மணி உட்காரந்தபடி சாய்ந்திருக்கிறார். இரு பைகளோடு அன்னை வருகை.

அன்னை:எழுந்திரும்மா. எழுந்து நான் கொண்டு வந்திருக்கும் இதை சாப்பிடு.எங்கேம்மா உன் குழந்தைகள்?
இந்து பெண்இங்கேதான் எங்கேயாவது இருப்பாங்க தாயி
அன்னை:உனக்கு எட்டு குழந்தைகள்னு சொன்னாங்களே.
இந்து பெண்ஆமா தாயி. எட்டு பேரு தான்
அன்னை:எத்தனை நாளா சாப்பிடலைம்மா. நீயும் குழந்தைகளும்? சரி முதல்ல நீயாவது சாப்பிடு. உனக்கு பசிக்கலை?
இந்து பெண் பசிக்கத்தான் செய்யுது. இதை தின்னா இப்போதைக்கு பசி அடங்கும். ஆனா அடுத்தாப்ல பசி திரும்பி எடுக்கும்போது திங்க என்ன இருக்கப்போவது? (பொட்டலங்களை காட்டி) இது எல்லாமே எங்களுக்கா?
அன்னை:ஆமாம்மா. உனக்கும் குழந்தைகளுக்கும். குழந்தைகளையும் கூப்பிட்டு நீயும் சாப்பிடு.
இந்து பெண் கொஞ்சம் இருக்கிறீங்களா - இப்ப வந்துடுறேன். “ஒரு பையை எடுத்துக்கொண்டு வெளியே செல்லுகிறாள். வெறுங்கையோடு திரும்புகிறாள்“
அன்னை:ஏம்மா - சாப்பாட்டை எடுத்துக்கிட்டு போனீயே எங்கேம்மா? குழந்தைகளுக்கா கொண்டு கொடுத்தே?
இந்து பெண் இல்லை தாயி. நாங்கள் பரவாயில்லை. எங்களுக்கு மூணு நாளாத்தான் திங்கிறதுக்கு ஒன்னுமில்லை. பக்கத்திலே ஒரு இஸ்லாம் குடும்பம். ஆறு குழந்தைகள் ஒரு வாரமா உண்ணாம திண்ணாம கிடக்குக. கொலை பட்னி. நினைச்சா கொடக்கொதிப்பா இருக்கு. நீங்க தந்தது முழுசையும் நாங்களே தின்னுட்டோம்னு வச்சிக்கோங்க இரக்கம் கெட்ட ஜென்மம் ஆயிடுவோம். நாங்க இந்துவா பொறந்ததுக்கே அரத்தம் இல்லாமப் போயிடும். தாயி போற உசிரை புடிச்சி நிறுத்தி பெரிய உபகாரம் பண்ணியிருக்கீயம்மா. நீங்க நல்லாயிருக்கனும் தாயி. ரொம்ப நல்லாயிருக்கனும்.
அன்னை:என் உதவியைவிட உன் உதவி தாம்மா பெருசு. ஒன்னுமில்லாத நிலைமையிலும் உனக்குன்னு கொடுத்ததை கொண்டு போய் பகிரந்திட்டு வந்திருக்கியே மற்றவங்க மேலே இரக்கம் காட்டுற பெரிய மனசு உனக்கு இருக்கும்மா. சரி சாப்பிடும்மா உட்காரந்து...
இந்து பெண் திங்கிறேன். திங்கிறேன் தாயி. ஏசுவை கும்பிடுற உங்களுக்கு எங்க மேலே இம்புட்டு அன்பா? இம்புட்டு அன்பா தாயி?
அன்னை:இந்துன்னு சொல்லிக்கிடுற உனக்கு ஒரு முஸ்லீம் குடும்பத்து மேலே எப்படி வந்தது அன்பு? அது மாதிரிதான். எந்த மதத்தை சேரந்தவங்களாயிருந்தாலும் அவுங்கள்லே நான் இயேசுவைத்தான் பாரக்கிறேன். அதைத்தான் நீயும் செய்றே. இயேசுவுடைய பாவையிலே இந்துன்னும் கிறிஸ்துன்னும் முஸ்லீம்னும் வேறுபாடு கிடையாது.
முஸ்லீம் பெண்(வந்து கொண்டே) அஸ்லாம் அலைக்கும். ரொம்ப நன்றியம்மா. ரொம்ப நன்றி.
அன்னை:ஓ! நீதானா அது. வாம்மா - வா. நன்றியை நம்ம மூணுபேரையும் அன்பால ஒன்னாக்கியிருக்கிற அந்த ஆண்டவருக்குச் சொல்லுவோமா?
முஸ்லீம் பெண் அல்லாஹு அக்பர்.
அன்னை:ஆமாம். ஆண்டவர் பெரியவர்.

அன்னை இருவரையும் இருகரங்களால் அணைத்தபடி நிற்கின்றார். விவிலிய வாசகம் ஒலிக்கிறது. பின்குரல் உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள். பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். விடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள். இறைவேண்டலில் நிலைத்திருங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிரந்து கொள்ளுங்கள். விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள். உரோமையருக்கு எழுதிய திருமுகம். ஆதிகாரம் 12 திருவசனங்கள் 10 முதல் 13 வரை.