இயேசுநாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! சிலுவையிலே நீர் அறையுண்டு சாகத் தீர்வையிடப் பட்டதைத் தியானித்து, நாங்கள் உம்மை வணங்குகிறோம். அகோரத் தீர்வையிலே நின்று எங்களை மீட்டருளும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி.
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக!
ஆமென்.
www.anbinmadal.org
இயேசுநாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! நீர் பாரமான சிலுவையைச் சுமந்து சென்றதைத் தியானித்து உம்மைத் ஆராதிக்கிறோம். எங்களுக்கு இவ்வுலகில் வருகிற வேதனைகளையும் தீமைகளையும் பொறுமையோடு அனுபவிக்க அருள்தாரும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி.
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக!
ஆமென்.
இயேசுநாதர் சிலுவையின் பாரத்தால் முதல்முறை தரையில் குப்புற விழுகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே முதல் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து நாங்கள் உம்மை வணங்குகிறோம். நாங்கள் செய்கிற பாவங்களிலே மூர்க்கராய் நிலை கொள்ளாமல் உடனே அவைகளை விட்டு எழுந்திருக்க உதவியருளும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி.
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக!
ஆமென்.
இயேசுநாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! உம்முடைய புனித அன்னை உமக்கு எதிர் கொண்டு வருகிறதைக் கண்டு நீர் சொல்லி லடங்காத வேதனையை அநுபவித்ததைத் தியானித்து உம்மைத் தொழுகிறோம். நாங்கள் சாகும் வேளையில் வியாகுல அன்னையின் அடைக்கலத்தை அடைய உதவியருளும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி.
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக!
ஆமென்.
இயேசுநாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! நீர் சிலுவை சுமந்து போகிறதற்குச் சீரேன் ஊராராகிய சீமோன் உதவி செய்ததைத் தியானித்து உம்மைத ஆராதிக்கிறோம். எங்களுக்கு நியமித்திருக்கிற சிலுவையாகிய துன்பங்களை உம்மோடு கூட நாங்கள் சுமக்கக் கருணை புரிந்தருளும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி.
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக!
ஆமென்.
இயேசுநாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! வெரோணிக்கம்மாள் உம்முடைய திருமுகத்தைத் துடைத்ததைத் தியானித்து, உம்மை ஆராதிக்கிறோம். நாங்கள் ஆள் பார்த்துச் செயல்படாமல் புண்ணிய நெறியில் உறுதியாய் நடக்க உதவியருளும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி.
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக!
ஆமென்.
இயேசுநாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே இரண்டாம் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மை ஆராதிக்கிறோம். நாங்கள் எந்தப் பாவத்திலும் திரும்ப விழாதபடிக்குக் கருணை கூர்ந்தருளும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி.
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக!
ஆமென்.
இயேசுநாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் சொல்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! உம்மை நோக்கி அழுத எருசலேம் பட்டணத்துப் பெண்களுக்கு நீர் ஆறுதல் சொன்னதைத் தியானித்து, உம்மை ஆராதிக்கிறோம். நாங்கள் புரிந்த பாவ துரோகங்களுக்காகத் துயரப்பட்டு, அவைகளுக்காக எப்போதும் அழுது கொண்டிருக்க அருள் பொழியும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி.
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக!
ஆமென்.
இயேசுநாதர் மூன்றாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே மூன்றாம் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மை ஆராதிக்கிறோம். நாங்கள சாவான பாவத்தோடு செத்து, முடிவில்லா நரகத்திலே விழாதபடிக்கு எங்களைக் காத்தருளும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி.
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக!
ஆமென்.
இயேசுநாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! உம்முடைய ஆடைகளைக் களைந்ததையும், உமக்குப் புளித்த திராட்சை இரசத்தைக் குடிக்க கொடுத்ததையும் தியானித்து உம்மை ஆராதிக்கின்றோம். நாங்கள் அனைத்திலும் உம்முடைய திருவுளத்துக்குக் கீழ்ப்படிந்து, பொறுமையோடு நடக்க கருணை கூர்ந்தருளும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி.
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக!
ஆமென்.
இயேசுநாதரை சிலுவையில் அறைகிறார்கள்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! நீர் சிலுவையில் அறையப்பட்டதைத் தியானித்து, உம்மை ஆராதிக்கின்றோம். நாங்கள் இவ்வுலகச் செல்வங்களையும் இன்பங்களையும் மட்டுமே நாடாமல், அவற்றைக் கொண்டு விண்ணுலக அரசினைச் சம்பாதித்துக் கொள்ள அருள் தாரும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி.
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக!
ஆமென்.
இயேசுநாதர் சிலுவையில் இறக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! நீர் சிலுவை மரத்தில் உயிர் விட்டதைத் தியானித்து, உம்மை ஆராதிக்கிறோம். நாங்கள் உம்மை மாத்திரமே அன்பு செய்து, அருள் நிலையில் இறந்து விண்ணுலகில் உம்மோடு வீற்றிருக்க உதவியருளும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி.
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக!
ஆமென்.
இறந்த இயேசுநாதரை அவர் தாயார் மடியில் வளர்த்துகிறார்கள்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! உம்முடைய திருச்சடலத்தை சிலுவையினின்று இறக்கி வியாகுல அன்னையின் மடியில் வளர்த்தியதைத் தியானித்து, உம்மை ஆராதிக்கின்றோம். எங்களுடைய இதயத்திலே உம்முடைய திருக்காயங்களும், தூய அன்னையின் வியாகுலங்களும் பதிந்திருக்க உதவியருளும் சுவாமி.
ஒரு பர., அருள்., திரி.
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
எங்கள் பேரில் தயையாயிரும் சுவாமி .
இறந்த விசுவாசிகள் இறைவனுடைய இரக்கத்தினால் அமைதியில் இளைப்பாறுவார்களாக!
ஆமென்.
இயேசுநாதரைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.
திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி கூறுகிறோம்.
ஏனெனில் உமது புனித சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டீர்.
திவ்விய இயேசுவே! உம்முடைய திருசடலம் அடக்கம் செய்யப்பட்டதைத் தியானித்து, உம்மை ஆராதிக்கிறோம். நாங்கள் சாகுமட்டும் உம்மை நேசிக்கவும் உம்முடைய பேரின்ப அரசுக்கு வந்து சேரவும் அருள்தாரும் சுவாமி.