Living Roasry

புனித பிலோமினம்மாள் செபம்.
புனித பிலோமினம்மாளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஓ மிகப் பரிசுத்தமான கன்னிகையே மகிமை பொருந்திய வேத சாட்சியே அர்ச்  பிலோமினம்மாளே, சர்வேசுரன் தமது நித்திய வல்லமையில் இந்த நிர்பாக்கிய  நாட்களில் கிறிஸ்துவர்களுடைய ஆன்மாக்களின் விசுவாசம் புதுப்பிக்கப்படவும் நம்பிக்கை தாங்கப்படவும் தேவ சிநேகம் தூண்டப்படவும் உம்மை உலகிற்கு  வெளிப்படுத்தியுள்ளாரே.

உமது பாதத்தில் விழுந்து கிடக்கிற என்னைப் பாரும். நன்மைத்தனமும் கருணையும் நிறைந்த கன்னிகையே என் மன்றாட்டுக்களை ஏற்க தயை புரியும். உலகக்கவர்ச்சி மிக்க இன்பங்களை   நீர்  பலியாக்கச்  செய்த உம்முடைய பரிசுத்தையும், உமக்கெதிரான மிகக்கொடும் தாக்குதல்களை யெல்லாம் எதிர்த்து நிற்கச் செய்த ஆன்ம வலிமையையும், உம்முடைய மகா பயங்கரமான உபாதைகளாலும் அளக்க முடியாத உமது ஆர்வமிக்க சேசு மீதுள்ள அன்பையும் எனக்கு அடைந்து  தாரும். இவ்விதமாய் உம்முடைய புனித கயிற்றை அணிந்து உம்மை கண்டு பாவித்து ஒரு நாள் உம்மோடே நான் மோட்சத்தில் முடி சூட்டப்படுவேனாக.
ஆமென்.