Living Roasry

அர்ப்பணம்

வாழும் செபமாலையில் ஒருவர் யாதொரு வற்புறுத்தலும் இன்றி தானாக சேர முன் வர வேண்டும். அப்படி முன் வருபவருக்கு பதினைந்து தேவ இரகசியங்கள் கொண்ட ஒரு முழு செபமாலையிலிருந்து ஒரு தேவ இரகசியம் ஒதுக்கித் தரப்படும். அவர் இந்த அர்ப்பண பத்துமணியை தினம் மரணம் வரை கீழே கூறப்படும் கருத்துக்;களுக்காக செபித்து வரவேண்டும்.

1.அர்ப்பண பத்துமணி

அர்ப்பண பத்து மணி செபத்துக்கு முன் சொல்லும் செபம்

புகழ்மிக்க கன்னியும் வேதசாட்சியுமான அர்ச்சிஷ்ட பிலோமினம்மாளே! கிறிஸ்துவுக்காக நீர் சிந்திய உம்முடைய தூய இரத்தத்திலே துவைந்த ரோஜா மலரே! தேவ இரகசிய ரோஜா மாதாவின் செல்ன மகளே! வாழும் செபமாலையின் வல்லமையுள்ள நமதுகாவலியே! இப்து நான் உமதுதிருப்பாதங்களில் சமர்ப்பிக்கப் போகிற பத்து மணி செபத்தையும் திரு செபமாலையின் இராக்கினியிடம் உமது கன்னிக் கரங்களால் சேர்த்தருள்வீராக!  ஆமென்..

ஒரு பரலேக மந்திரம்.
பத்து அருள்நிறை மந்திரம்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேவ இரகசியத்தை தியானித்துச் சொல்லுதல்.
(பத்து மணி செப முடிவில்)
துயரம் நிறைந்த மரியாயின் மாசற்ற இருதயமே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ப்பண பத்து மணி ஓப்புக் கொடுத்தபின் சொல்லதக்கச் செபம்

ஒ மரியாயின் மாசற்ற இருதயமே! நான் முழுவதும் உம்முடையவன் என்னைக் காப்பாற்றும். குளிர்ந்த மரண வேர்வையால் நனைந்து, கடவுளின் பகையில் இன்று மரிக்கப் போகிற ஆன்மாக்களை,மரியாயின் மாசற்ற இருதயமே நீர் வந்து சந்திப்பீராக.சேசுவின் விலைமதியாத திரு இரத்தத்தினால் அவர்களைக் கழுவியருளும். கடவுளின் தேவ வரப்பிரசாதத்தை அவர்களின் சுவாசமாகக் கொடுத்தருளும். அவர்கள் விநுவாசம் நம்பிக்கை தேவ சிநேகமானிய உத்தம புண்ணிய முயற்சிகளைச் செய்யும் வரத்தை அவர்களுக்குப் பெற்றுத்தாரும்.அதனால் அவாடகள் நரக பாதளத்திலிருந்து காப்பாற்றப்பட்டு நித்தியத்திற்கும் சர்வேசுரனை மகிமைப்படுத்தி எமது வெற்றி பிரதாபத்தை அதிகரிப்பார்களாக!.   ஆமென்.

2.கருத்து

மரியாயின்மாசற்ற இருதயத்தின் வெற்றியும்
நம்அன்புக்குரிய பாதுகாவலி அர்ச்.பிலோமினம்மாளின் மகிமையும்.

3.செபிக்கும்முறை

சேர்ந்து செபிக்கலாம் அல்லது தனியே செபிக்கலாம். காலையிலோ-மாலையிலோ செபிக்கலாம்.
வேண்டுகோள்

15 தேவ இரகசியங்கள் கொண்ட ஒரு முழு செபமாலைக்கு 15 பேர் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொருவரும் வாழும் செபமாலை உறுப்பினர், ஊக்குவிப்பாளர்கள், நன்கொடையாளர்கள், இறந்த உறுப்பினர்களுக்காகச் செபிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தப் பக்தி முயற்சி முதன்னையாக அர்ச். பிலோமினம்மாளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. அர்ச். பிலோமினம்மாள் எதையுமே தனக்கென வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் நம் செபமாலை இராக்கினியின் பாதங்களில் சேர்த்து விடுகிறாள். அர்ச். பிலோமினம்மாளை மகிமைப்படுத்தவும் அவளுடைய உபகாரங்களைப் பெற்றுக் கொள்ளவும் மிகசிறந்த வழி இது.