Living Roasry

வரலாறு

வாழும் செபமாலையின் நோக்கம் :

உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களையும் மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக சேசு கிறிஸ்துவிடம் சேர்த்தல்.

வாழும் செபமாலையின் தொடக்கம் :

'உலகளாவிய வாழும் செபமாலை' இயக்கம் முத். பவுலின்ஜாரிக்கோட் என்ற பெண்மணியால் 1826-ல் தொடங்கப்பட்டு திருச்சபையால் 1832 ஜனவரி 27-ம் நாளில் 16-ம் கிரகோரி பாப்பரசரால் அங்கீகரிக்கப் பட்டது. திருச்சபையால் அநேகபலன்களும் அதற்கு அளிக்கப்பட்டுள்ளன.

வாழும் செபமாலை என்றால் என்ன?

'வாழும் செபமாலை' ஒரு புதிய பக்தி முயற்சியல்ல. பதிதரின் படிப்பினைகளில் ஏமாந்தவர்களையும் பாவங்களில் உழன்றவர்களையும் மனந்திருப்ப தேவதாயிடமிருந்து அர்ச்.சாமிநாதர் செபமாலைப் பெற்று பிரசங்கிதத்தின் தொடர்ச்சியே 'வாழும் செபமாலை'. உலகின் பாவநாட்டங்கள், தப்பறைகள், போராட்டங்கள், குழப்பங்கள் மற்றும் நவநாகரீக சீரழிவுகளிலிருந்து நம்மையும் மேற்றிராசனங்களையும் நம் நாட்;டையும் பாதுகாத்திட உதவும் கருவியாக வாழும் செபமாலை தேவ ஏவுதலால் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.

வாழும் செபமாலையில் இலட்சக்கணக்கான  மக்கள்  நெருங்கிய  செபஉறவு  கொண்டு ஒரே  நோக்கத்தோடும் ஒரே கடவுள் அன்பிலும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். உலகத்தின் எந்த மூலையிலிருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரே தேவ சிநேகத்திலும் ஒரே தேவ வரப்பிரசாதத்தினாலும் மரியாயின் மாசற்ற இருதயத்தின் அன்பின் சூளையிலிருந்து ஊட்டம் பெறுகிறார்கள் இந்த உலகளாவிய செபமாலை ஐக்கியத்தால் சாத்தானின் செருக்கு திரும்பவும் தோற்கடிக்கப்படுகிறது.

ஒருவர் தனியாக செபமாலை செபக்கிறபோது ஒரு செபமாலைக்குரிய அருளையும் வரத்தையும் பெறுகிறார். ஆனால் இலட்சோப இலட்சம் பேருடன் இணைந்து செபக்கும் போது அதிகப்படியான பேறுபலன்களைப் பெறுவார் என்பது திண்ணம்.