Living Roasry

அன்னைக்கு வாழ்த்துக்கள்

வாழ்க அரசியே!
தயை மிகு அன்னையே! வாழ்வே.
இனிமையே. தஞ்சமே வாழ்க!
தாயகம் இழந்த ஏவையின் மக்கள்
தாயே என்றுனைக் கூவி அழைத்தோம்.
கண்ணீர் கணவாய் நின்றுனை
நோக்கி கதறியே அழுதோம்.
பெருமுச்செறிந்தோம்.
ஆதலால் எமக்காகப் பரிந்துரைப்பவளே
அன்புடன் எம்மைக் கடைக்கண் பாராய்
உம் திருவயிற்றின் கனியாம் இயேசுவை
இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவாய்
கருணையின் உருவே, தாய்மையின் கனிவே!
இனிமைத் தருவே கன்னி மரியே!