பாரம்பரியச் சிலுவைப் பாதை

இயேசுவுடன் நாமும் செல்வோம்


crossஇயேசுவுடன் நாமும் செல்வோம். அவர் தன் சிலுவையைச் சுமந்துச் சென்றார்.அவர் கடந்து வந்த பாதையில் நடந்த சந்திப்புகள் பல. வந்த இடர்கள் பல. அனுபவித்த இன்னல்கள் பல. என்றாலும் இறுதிவரை தளராது சென்றார். சாவை வென்றார். அன்னை மரியாள் துணையாய் அவருடன் இருந்தார். வாருங்கள் நாமும் நம் சிலுவைகளைச் சுமந்து வெற்றி இலக்கை நோக்கிச் செல்வோம். இதோ அன்னை மரியாளுடன் இறைமகன் இயேசுவும் நம்முடன் வருகிறார். என் இறைவா!நன்மை நிறைந்தவர் நீர் அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர் நீர். என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்களை பல செய்தேன் எனவும் நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன.; உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும் பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளைவிட்டு விலகுவேன் என்றும் உறுதி கொண்டிருக்கிறேன்.

எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக இறைவா என் மேல் இரக்கமாயிரும். திவ்விய இயேசுவே!எங்களுக்காகவும் உத்திரிப்பு நிலை ஆனமாக்களுக்காகவும் சிலுவைப் பாதையைத் தியானிப்பவர்களுக்கு அளிக்கப்படும் பலன்கள் அடைய விரும்பி உம் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறோம். புனித மரியே! வியாகுலஅன்னையே! இயேசுவின் பாடுகளின் போது அவரோடு உடனிருந்து அவருடைய பாடுகளில் பங்ககேற்றது போலää நாங்களும் எங்கள் அயலார் அனுபவிக்கும் துன்பங்களில் அவர்களுடன் இருந்து துணைபுரியும் ஆற்றலைப் பெற உம் திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அடுத்தது



anbinmadal.org-2002-03     அன்பின்மடல்