புனிதத்தில் இறைவனைத் தேடுதல்

சகோதரி ஏஞ்சல் மேரி - திருச்சி புனித அன்னாள் சபைகடல்நீர் கரையைத் தேடி வருகிறது.
வண்டானது மலரைத் தேடி வருகிறது.
மழைநீர் பூமியைத் தேடி வருகிறது.
குழந்தைத் தன் தாயைத் தேடி வருகிறது.
கன்றானது பசுவைத் தேடி வருகிறது.
பணக்காரன் பதவியைத் தேடி வருகிறான்
ஏழைப் பணத்தைத் தேடி அலைகிறான்
பக்தன் கடவுளைத் தேடி வருகின்றான்.

நாம் யாரைத் தேடி இருக்கின்றோம் என்பதை இந்த நேரத்தில் சிந்திப்போம். மேலும் மேடல் என்பது மலர வேண்டுமெனில் அங்கே மகிழ்ச்சி, அன்பு, பொறுமை, சமாதானம் ஆகிய நற்குணங்கள் உரமாக வேண்டும். அப்போது தான் இயேசுவைத் தேடக்கூடிய மனநிலை ஏற்படும். அது நம் மனதில் ஏற்பட வரம் வேண்டி இணைவோம்..

தேடல் என்பது வாழ்வின் மிக இன்றியமையாத ஒன்று. வாழ்வில் ருசியை ஏற்படுத்துவது தேடலே. தேடல் கூட ஒரு சுகமே.

at the door வெற்றியையும் வாழ்வின் இலக்கையும் ஏற்படுத்துவது தேடல். வாழ்வில் பிரகாசத்தையும், உற்சாகத்தை ஏற்படுத்துவது தேடல், வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்தும் தேடல் இத்தகைய உன்னதமான பண்பைச் சிந்திக்க இந்தப் புனிதமான நாட்களில் நாம் யாரைத் தேடுகின்றோம் என்பதை அறிவது அவசியம்.

நம் இதயகதவருகில் நின்று ஒவ்வொரு நாளும் தட்டி விழித்தெழுச் செய்கின்ற பரமன் இயேசு, அனேகரைத் தேடினார். ஏழைகளை, எளியவரை, பாவிகளை, பரிதவிப்போரை அன்போடு தேடினார். இன்று நம்மையும் தேடி நம் மத்தியில் வந்துள்ளார். நம்மைத் தேடிவந்த இயேசுவிடம் நாம் கேட்டும் வரம் என்னவாக இருக்கும்?

பிறரை வணங்கும் மக்களாய் வாழாது - உம்மை
வணங்கும் மக்களாய் வாழ வரம் தந்து வழிகாட்டுவாய்
ஒடும்நீரைப் போல் உம்மை நாடி வந்தோம்.
உம்மால் நாங்கள் வாழ, உலகம் உம்மில் வாழ....
உம்மை அறியாதவர் திசைத் தவறிப் போவார்
உம்மைத் தெரியாதவர் வாழ வழி அறியார்
தாயின் மடியில் மழலை மகிழ்வது போல்
தந்தாய் உம்மடியில் நான் மகிழ்ந்து
உன்னை அனுதினமும் தேடிட வரம் தாராய்..

ஆம் அன்பு உள்ளங்களே, நம் தேடல் வெறும் வாய்மொழியோடு நின்று விடாமல் புதையலான அன்பர் இயேசுவை இதயத்தின் ஆழத்திலிருந்து தேட வேண்டும். மனதளவில் உயர்ந்து இறைவனில் இரண்டர இணைவோம்.

தேடத் தொடங்கிவிட்டோம் என்றால் வாழத் தொடங்கிவிட்டோம் என்றே அர்த்தம். சோதனைகளைச் சாம்பலாக்கிச் சாதனை உலகின் சுடராகத் திகழ வேண்டும் என்றால் ஒளியான அவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.


முடிந்து விட்டது வாழ்க்கை என இல்லாமல்
விடிந்துவிட்டது வாழ்க்கை என வெற்றி நடைப்போட்டு
உன்னதரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
அன்பு உள்ளங்களே! நாம் பல நேரங்களில் எவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இல்லாது வீணானவற்றைத் தேடி வாழ்வை வீணடிக்கின்றோம். நிலைவாழ்வுத் தரும் ஊற்று இறைமகன் இயேசுவிடம் மட்டுமே உள்ளது என்பதை உணர்ந்து அந்த ஊற்றத் தேடிக் கண்டுபிடிக்க இன்றே முயற்சி எடுத்தவர்களாய் இறைவார்த்தைக்குச் செவிமெடுர்போம்.

இனிமைமிகுப்பாடல்கள் 3:1-4

1. இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்; 
என் உயிர்க்குயிரான அன்பரைத்
தேடினேன்; தேடியும்
அவரை நான் கண்டேன் அல்லேன்!

2 “எழுந்திடுவேன்; நகரத்தில் 
சுற்றிவருவேன்; 
தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி
என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்”
தேடினேன்; தேடியும் அவரைக்
கண்டேன் அல்லேன்!

3. ஆனால் என்னைக் கண்டனர்
சாமக்காவலர்;
நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்.
“என் உயிர்க்குயிரான அன்பரை
நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன்.

4. அவர்களைவிட்டுச் 
சற்று அப்பால் சென்றதுமே 
கண்டேன் என் உயிர்க்குயிரான 
அன்பர்தமை. 
அவரைச் சிக்கெனப் பிடித்தேன்; 
விடவே இல்லை;

அன்பரைத் தேடுகின்றார். சிக்கெனப் பிடித்துகொண்டார். நாமும் தேடுகின்றோம். எந்த மனநிலையோடு, ஒரு நாள் கண்டுபிடித்து விடுவோம் என்ற மனநிலையோ? சிந்திப்போம்.

செபிப்போமாக:- அன்பு இயேசுவை நாங்கள் பல நேரங்களில் எவற்றைத் தேடிகின்றோம் என்று அறியாமல் வீணானப் பேச்சுகளாலும், பொருள்களாலும், வீணானவற்றைத் தேடி வாழ்வை வீணடிக்கின்றோம். அன்பு இயேசுவை நிலைவாழ்வுத் தரும் ஊற்று உம்மிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்து அந்த ஊற்றைப் பருகக் கூடிய அருளையும் ஆசிரையும் தந்தருள வேண்டுமென்ற உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

மன்னிப்பு வேண்டல்:- இறைவனின் குரலைக் கேட்ட நாம் அவரை மறந்து வாழ்ந்துத் தேடாத நேரத்திற்கு மன்னிப்புக் கேட்போம்.
1. காணாமற்போன ஆட்டை ஆயன் தேடிக் கண்டுபிடிப்பது போல, பாவம் செய்து வழிமாறிப் போனாலும் எங்களை நல் ஆயனாய் தேடிவருகின்றீர் என்பதை உணராமல் இருந்ததை நினைத்து மன்னிப்பு வேண்டுகிறோம்.
பாடல்: அப்பா நான் தவறு செய்தேன்..
2. திருப்பலி என்னும் அருட்சாதனத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் எங்களைத் தேடி வருகின்றீர் என்பதை உணராமல் வாழ்ந்தத் தருணத்திற்காக..மன்னிப்பு வேண்டுகிறோம். பாடல்: அப்பா நான் தவறு செய்தேன்..
3. நற்கருணை வடிவில் உமது உடலையும், இரத்தத்தையும் ஆன்ம உணவாகக் கொடுத்து எங்கள் உள்ளத்தைத் தேடி வருகின்றீர் என்பதை மறந்து வாழ்ந்தத் தருணத்திற்காக மன்னிப்பு வேண்டுகிறோம்.
பாடல்: அப்பா நான் தவறு செய்தேன்..

மன்றாட்டு:
அன்பான உள்ளங்களே! இந்தப் புனிதமான நேரத்தில் இவ்வளவு நேரமாக யாரைத் தேட வேண்டும், எதற்காகத் தேட வேண்டும் என்பதை அறிந்த நாம் தேடுவதைப் பற்றியோ அதன் வெளிப்பாடுகளைப் பற்றியோ நம் மனதில் பட்ட, நம் மனதைத் தொட்டதை ஒரிரு வார்த்தைகளில் பகிர்வோம்.
நான் இயேசுவைத் தேடும் போது என் உள்ளம் வலிமை பெறுகிறது.

இறுதி செபம்:-
உம்மையே தேடிவந்தோம் இறைவா!
நாசரேத்தூர் இயேசுவே உம்மையே தேடி வந்தோம். 
வண்டுகளாக வண்ணமலர்த் தேடி வந்தோம். 
உன் அன்பு இனிமைச் சுவைக்க நாடி வந்தோம். 
நீர் தான் இயேசு என்று கண்டதும் 
நீசகுணம் எம்மை விட்டு நீங்க கண்டோம். 
உம்மை விட்டுப் பிரியமாட்டோம். 
உம்மை என்றும் விட மாட்டோம். 
உம்மில் இரண்டறகலந்து அன்பு செய்வோம். 
பிறர் உள்ளம் நீர் வாழ நல்வழித் திறப்போம் 
எனைத்தேடும் மனிதனுக்கு வாழ்த்தொலியோடு நில்லாது, 
இருப்பதைப் பகிர்ந்தளித்து இன்முகம் காட்டிட 
இடர்பல நீக்கி இனிதே மகிழ்ந்திட 
என்றுமே தேடி உன்னில் சரணடைவோம். -ஆமென்


sunday homilyA Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com