செப்டம்பர், 30 - ஞாயிறு

இன்றைய நற்செய்தி:

மாற்கு 9:38-48

நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார்."

அருள்மொழி:

நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
மாற்கு 9:41

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் பெயரால் பேய் ஓட்டுபவரை அறிகின்றோம். அவர் நாங்கள் தடுக்கப் பார்த்தோம் என்று இறைமகனிடம் யோவான் கூறினார். காரணம் அவர் நம்மைச் சாராதவர். இதனைக் கேள்வியுற்று இயேசு தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லச்செயல் செய்பவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்துப் பேச மாட்டார். காரணம் என் மேல் அதிகம் நம்பிக்கைக் கொண்டுள்ளவராக இருப்பதால் தான் வல்லச் செயல் செய்ய முடிகிறது. அதே வேளையில் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உலகில் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் பெறாமல் போக மாட்டார் என்று இயேசு நம்மைப் பார்த்துச் சொல்கின்றார். எனவே இறைவனின் பெயரால் பகிர்ந்து வாழ்வோம். இறை மனித உறவில் சங்கமிப்போம்.

சுயஆய்வு :

  1. நான் கிறிஸ்துவை அறிகிந்துள்ளேனா?
  2. கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே உமது திருப்பெயரால் வறியோருக்குப் பகிர்ந்து அளிக்கும் வரம் தாரும்


www.anbinmadal.org