செப்டம்பர் 29, சனி

இன்றைய நற்செய்தி:

யோவான் 1:45-51

"வானம் திறந்திருப்பதையும், கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.”

அருள்மொழி:

மேலும் "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார்.
யோவான் 1:51

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பிலிப்பு, நத்தானியேல் ஆகியோரை அழைக்கின்றார். முதலில் பலிப்பைக் கண்டதும் "என்னைப் பின் தொடர்ந்து வா" என்று அழைக்கிறார். பிலிப்பு நத்தானியேலைப் போய்ப் பார்த்துத் தான் பெற்ற ஆசீரை அவருக்கு அறிவித்து அவரை அழைக்கின்றார். நத்தானியேல் இயேசுவிடம் வருவதை உணர்ந்த இறைமகன் "இவரை உண்மையான இஸ்ரவேலர். கபடமற்றவர் என்று அவரைக் குறித்துச் சொல்கின்றார். உடனே நத்தானியேல் "என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்? என்றதும் "உமை அழைப்பதற்கு முன்பே உமை அத்திமரத்தின் கீழே கண்டேன்" என்றார். உடனே நத்தானியல் அவரைப் பார்த்து "ரபி. நீர் இறைமகன் நீரே இஸ்ராயேல் மக்களின் அரசர்" என்றார். உடனே இயேசு "அத்திமரத்தின் கீழே உமை கண்டேன் என்றதாலா? என்று ஒரு வினாவைத் தொடுக்க, தொடர்ந்து இதை விடப் பெரியவற்றைக் காண்பீர். வானம் திறந்திருப்பதையும், கடவுளின் தூதர்கள் மானிட மகன் மீது ஏறுவதும் இறங்குவதும் காண்பீர்." என்று இறை நம்பிக்கையை அவர்கள் உள்ளத்தில் பதிவுச் செய்கிறார் நாம் ஏற்போம்.

சுயஆய்வு :

  1. நத்தானியலை நான் அறிகிறேனா?
  2. அவரைப் போல் வாழ்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது வருகையின் கருப்பொருள் உணர்ந்து வாழ வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org