செப்டம்பர், 28 - வெள்ளி

இன்றைய நற்செய்தி:

லூக்கா 9:18-22

“ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?""

அருள்மொழி:

"ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்?" என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா" என்று உரைத்தார்.
மத்தேயு 7:29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நான் யார் என மக்கள் சொல்கிறார்கள் என்று தன் சீடர்களிடம் கேட்கிறார். அவர்கள் சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் இன்னும் சிலரில் ஒருவர் என்றும் சொல்கின்றனர். ஆனால் இயேசு தன் சீடர்களைப் பார்த்து "நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று என்னிடம் கேட்டார். காரணம் இயேசுவின் அழைப்பை ஏற்று அருள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். இறைமகனின் உடனிருப்பை நன்கு சுவைத்தவர்கள். அவர் விட்டுச் செல்லும் இறையாட்சிப் பணியை இவ்வுலகு அறியப் பறைச் சாற்றும் ஆற்றல் படைத்தவர்கள் என்று தான் இறைமகன் விண்ணகம் ஏறிச் சென்றபோது "அஞ்சாதீர்கள்! நான் உங்களுக்கு உண்மையை நோக்கி வழிநடத்தும் துணையாளரை அனுப்புவேன்" என்றார். இவர்கள் வழியாகக் கிறிஸ்துவம் ஒளிரட்டும் என்னும் மெய் ஞானத்தால் தான் சீடர்களைப் பார்த்துக் கேட்கிறார் "நீங்கள் நான் யாரென்று நினைக்கிறீர்கள்". உடனே பேதுரு "நீர் வாழும் கடவுளின் மெசியா" என்று அறிக்கையிடுகின்றார். நாம் வாழும் கடவுள் மெசியாவின் உறுப்புகள் என்பதை மறவாமல் செயல்படுத்துவோம்.

சுயஆய்வு :

  1. என்னை யார் என்று சொன்னவர் இருக்கின்றேனா?
  2. வாழும் கடவுளின் மெசியாவை உணர்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே நீர் என்றென்றும் வாழும் கடவுளின் மெசியா என்பதை உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org