செப்டம்பர், 27 - வியாழன்

இன்றைய நற்செய்தி:

லூக்கா 9:7-9

“"யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?"

அருள்மொழி:

ஏரோது, "யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!" என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
லூக்கா 9:9

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய இந்தச் செயலை இயேசு செய்கிறார். இதுதான் ஏரோது மன்னனின் மனம் குழம்பியதற்குக் காரணம். இயேசுவின் பக்கம் மக்கள் சென்று விடுவார்களே என்ற அச்சம் அவனுக்கு ஏற்பட்டது. ஒரு மனிதனை உயர்ந்தவராக மாற்றுவது அவரது அதிகாரமும் பதவியும் அல்ல. மாறாக அவருடைய நற்செயல்களே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஏரோதுவைப் போலப் பொறாமை என்ற தீயக் குணம் நம்மை வாட்டி வதைக்கும்.

சுயஆய்வு :

  1. பிறரின் நற்செயல்களைப் பாராட்டியிருக்கிறேனா? ?
  2. ஏரோதுவின் எண்ணங்களை அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, நற்செயல்கள் புரிந்திடும் நல் மனதினை உம்மில் தாரும். ஆமென்.


www.anbinmadal.org