செப்டம்பர், 26 - புதன்

இன்றைய நற்செய்தி:

லூக்கா 9:1-6

“இறையாட்சியைப் பறைசாற்றவும், உடல்நலம் குன்றியோரைப் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார். ”

அருள்மொழி:

இறையாட்சிபற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
லூக்கா 9:2

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பன்னிரு சீடர்களை வரவழைத்துப் பேய்களை ஓட்டவும், பிணிகளைப் போக்கும் வல்லமையும், அதிகாரத்தையும் கொடுத்து இறையாட்சியைப் பற்றிப் பறைசாற்றும் அவரை அனுப்பினார். கையில் எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம். ஓர் அங்கி மட்டும் போதும். எந்த வீட்டுக்குச் சென்றாலும், உங்களை ஏற்றுக்கொள்ளும் இறைஞானம், அங்கு இருந்தால் மட்டுமே அங்குத் தங்கியிருங்கள். இல்லையேல் அங்கிருந்துப் புறப்பட்டு வரும்போது உங்கள் மடியில் உள்ள அந்தத் தூசியைத் தட்டி விடுங்கள் என்று நலாசானாகப் பதிவு செய்கின்றார். காரணம் இறைமையின் நிறைவைக் கண்டவர்கள், ருசித்தவர்கள் மட்டுமே திருத்தூதரை அறிந்து, அவர்களது வருகையை ஏற்று இறை ஆசிப் பெற்றுக் கொள்வார்கள் என்பதே உண்மை என்பதை என்று உணர்ந்து மலர்ந்திடுவோம் அன்பினில்!

சுயஆய்வு :

  1. திருத்தூதுப் பணியாற்றும் பணியாளரை அறிகிறேனா?
  2. இறையரசு என்னில் நிலைத்திருக்க எனது முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே உமது இறையரசை மக்களிடையே எடுத்துச் செல்லும் ஆற்றலை எனக்குத் தாரும்.


www.anbinmadal.org