செப்டம்பர் 25 செவ்வாய்

இன்றைய நற்செய்தி:

லூக்கா 8:19-21

"இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்"

அருள்மொழி:

அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார்.
லூக்கா 8:21

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இறைவார்த்தை இயேசு உண்மையான உறவினர் யார் என்பதை இங்கே பதிவு செய்கின்றார். எப்படி எனில் இங்கே மரியாவும் அவர் சகோதரர்களும் அங்கே இறைமகனைக் காண ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் வெளியில் நின்றார்கள். அவருக்கு அவர்கள் வந்த செய்தியை அறிவித்தார்கள். அப்போது இறைமகன் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுபவர்களே என் தாயும் சகோதரரும் ஆவார் என்றார். ஏனெனில் இறைவனின் திட்டத்திற்கு மரியா தன்னை முழுமையாகக் கபிரியேல் வானதூதர் இடம் " உம் வார்த்தையின்படியே எனக்கு நிகழட்டும்" என்று அர்ப்பணித்தார். அது முதல் தன் மகனின் மீட்புப்பணியில் இறுதிவரை உடனிருந்தார். இறைமகன் விண்ணகம் சென்ற பின்பும் தூயஆவியாரின் வருகையின் போதும் திருத்தூதர்களோடு இருந்து இன்றுவரை உலகை காத்து வருகிறார் இவரே நம் தாய்!

சுயஆய்வு :

  1. இறைவார்த்தையின்படி வாழ்பவவை அறிகிறேனா?
  2. அவை அவ்வாறே நான் செயல்படுகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே உன் தாயாரின் ஆசியோடு நானும் உம் மீட்பின் திட்டத்தில் உடன் பணியாற்றிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org