செப்டம்பர், 24 - திங்கள்

இன்றைய நற்செய்தி:

லூக்கா 8:16-18

“வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. அறியப்படாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.”

அருள்மொழி:

வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.
லூக்கா 8:17

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு விளக்கு உவமை வாயிலாக எதையும் வெளிப்படையாக மூடி வைக்க முடியாது. ஒளி எவ்வாறு அனைவருக்கும் ஒளிர வேண்டுமென்று விளக்குத் தண்டின் மீது வைக்கின்றோமோ அவ்வாறே இறைவாக்கு வெளிப்படுத்தப்படாமல் அறியப்படாமலும் இருத்தலாகாது. அது மலையின் உச்சியின் மீது ஏற்றிய ஒளிக்குச் சமமாகும். எனவே நாம் இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டு அதன் கட்டளையின் படி வாழ அழைப்புப் பெற்றுள்ளோம். நுழைவாயில் என்பதை உணர்ந்து மறைபோதனைகளை ஏற்று நம் வாழ்வில் அதைக் கடைபிடித்து இறை மனித உறவில் சங்கமித்து வாழ்வோம். வாரீர்.

சுயஆய்வு :

  1. வெளிப்படையாக வாழ என் முயற்சி யாது?
  2. தண்டின் மேல் இட்ட விளக்காகிட எனது முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே உமது வார்த்தை என் வாழ்வின் ஒளியாகிடும் வரம் தாரும் . ஆமென்.


www.anbinmadal.org