..

செப்டம்பர் 22 சனி

இன்றைய நற்செய்தி:

லூக்கா 8:4-15

“ நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்”

அருள்மொழி:

"நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.
லூக்கா 8:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு விதைப்பவர் உவமை வாயிலாக இறைவார்த்தை எத்தகைய மனநிலையில் இருப்பவர்களிடம் அது விழும் போது அதன் தகுதிகேற்ப எவ்வாறு பலன் தருகிறது என்பதற்குச் சான்று சில உதாரணங்களை முன்வைக்கிறார். இறைவார்த்தை எத்தகையது? அதனைக் கேட்டு அதன்படி வாழ்பவர் என்ன பயன் அடைகிறார்கள்? என்பதை உவமையின் நோக்கம். வழியோரம் விழுந்தவர்கள் அலகையின் சூழ்ச்சிக்கும், பாறை மீது விழுந்தவர்கள் கவர்ச்சியோடு அதைக் கேட்டுப் பின் மாயை மறக்கும் நிலைக்கும், முட்செடியில் விழுந்தது நம்மைச் சுற்றியுள்ள ஆசாபாசங்கள் பேராசைகள் அனைத்தும் நெருக்கும் நிலை. நல்ல நிலத்தில் பண்பட்ட உள்ளத்தில் விதைத்த விதைக்கு ஒப்பானவர்கள். இவர்கள் பெற்றுக்கொண்ட தன்மைக்கு ஏற்ப பலன் தருவார்கள் என்பதை! அவர்கள் கண்டும் காண்பதில்லை கேட்டும் புரிந்து கொள்ள முடியாதவர்களாக முன்னிட்டு இந்த உவமையை நமக்குப் பதிவு செய்கின்றார்.

சுயஆய்வு :

  1. உவமையின் நோக்கம் உணர்கிறேனா?
  2. நான் எந்த வகையான நிலமாக உள்ளேன்?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! பண்பட்ட நிலமாக நான் வாழும் வரம் தாரும்.ஆமென்


www.anbinmadal.org