செப்டம்பர் 20

இன்றைய நற்செய்தி:

லூக்கா 17 36 50

"உமது நம்பிக்கை உம்மை மீட்டது. நம்பிக்கையுடன் செல்க."

அருள்மொழி:

இயேசு அப்பெண்ணை நோக்கி, "உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க" என்றார்.
லூக்கா 17:50

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயரின் வீட்டிற்கு விருந்து உண்ணச் சென்றார். அவ்வேளையில் பாவியான பெண் ஒருவர் இயேசு இங்கே விருந்துண்ண வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், கையில் படிகசிமிழ் நிறைய நறுமணத் தைலத்தைக் கொண்டு வந்து அவரது கால்களில் கொட்டித் தன் கண்ணீரால் கழுவி கூந்தலால் துடைத்துத் தன் பாவத்திற்குப் பரிகாரம் தேடி வந்தார். தொடர்ந்து தன் பாவத்திற்குப் பரிகாரம் கிடைக்கும் என்ற ஆழமான நம்பிக்கையுடன் சென்று கொண்டிருந்தார். இதனைக் கண்டவர்கள் "இவள் பாவி ஆயிற்றே, இவள் தொடுவதை ஏற்றுக் கொள்கிறாரே" என்று பேசிக்கொண்டனர். ஆனால் இறைமகன் இயேசு நான் பந்தியில் அமர்ந்து என் கால்களைக் கழுவ நீர் கொடுக்கவில்லை. ஆனால் அந்தப் பெண்ணோ தன் கண்ணீரால் கழுவித் துடைத்துத் தன் பாவத்திற்குப் பரிகாரம் தேடிக் கொண்டார். அப்பெண்ணை நோக்கி இறைமகன் உமது நம்பிக்கை உம்மை மீட்டது. நம்பிக்கையுடன் செல்க என்று மனம் திருந்தியப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கினார்.

சுயஆய்வு :

  1. நான் செய்தப் பாவங்களை உணர்கின்றேனா?
  2. அதற்காக மனம் வருந்துகின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் செய்தப் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோரும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org