செப்டம்பர் 19, புதன்

இன்றைய நற்செய்தி:

லூக்கா 17: 31-35

"ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று”

அருள்மொழி:

எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று" என்றார்.
லூக்கா 17:35

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் நீதி நெறிகளை ஏற்க மறுத்தவர்களை வன்மையாகக் கண்டிக்கிறார். சிதறடிக்கப்பட்டும் மேடுபள்ளங்களாக இருந்த மனுகுலத்தைச் சமன்படுத்தவே திருமுழுக்கு யோவான் வந்தார். அதன் அடிசுவடிகளிலிருந்து இறைமகனின் வருகையை முன் அறிவித்தார் யோவான். ஆனால் இதை எதையும் ஏற்க மனமில்லாத நிலையில் அன்றைய யூதர்வர்க்கம் இருந்தது. எனவே தான் திருமுழுக்கு யோவான் எதையும் உண்ணாமல் குடிக்காமல் இறையரசின் விழுமியங்களை விதைத்தார்.
இறைமகன் அனைவரோடு உண்டுக் குடித்து, அனைவரும் ஒன்றே என்ற மனநிலையைப் பதிவுச் செய்கிறார். ஆனால் அன்றைய யூதர்வர்க்கம் எதையும் ஏற்கும் மனநிலையில் இல்லாததைக் கண்டு இயேசு ”ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று ஆகும்” என்று பதிவுச் செய்கிறார்.

சுயஆய்வு :

  1. இறைவாக்கு மெய்யானது என்பதை அறிகிறேனா?
  2. ஞானம் மெய்யானது என்பதை ஏற்றுச் செயல்படுகின்றனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே ஞானத்தைத் தேடுவோர் அதைப் பெற்றுக் கொள்கின்றனர் என்னும் மெய் ஞானத்தை வழங்கும் வரம் தாரும் ஆமென்


www.anbinmadal.org