ஜூன், 19 - செவ்வாய்

இன்றைய நற்செய்தி:

லூக்கா 7:11-17

" இளைஞனே நான் உனக்கு சொல்கிறேன் எழுந்திடு”

அருள்மொழி:

அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், "இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு" என்றார்.
லூக்கா 7:14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் நயீன் ஊர் கைம்பெண்ணின் ஒரே மகன் இறந்து இறந்து விட்டான். இயேசு செல்லும் வழியில் அந்தச் சிறுவனைப் பாடையில் வைத்துக் கொண்டு வந்தனர். கைம்பெண் அழுதுகொண்டே வந்தாள். இதனைக் கண்ட இறைமகன் தாயின் மீது பரிவு கொண்ட காரணம் ஒரே மகன். அவளுக்கு யாரும் ஆதரவும் கிடையாது. இதனால் பாடையைத் தொட்டார். தூக்கிச் சென்றவர்கள் நின்றனர். உடனே இயேசு "இளைஞனே நான் உனக்குச் சொல்கின்றேன். எழுந்திடு" என்றார். இளைஞன் குணம் பெற்று எழுந்தான் உட்கார்ந்துப் பேசத் தொடங்கினான். இயேசு தன் தாயிடம் அவன் தாயிடம் ஒப்படைத்தார். இக்காட்சியைக் கண்டவர்கள் அச்சத்துடன் நம்மிடையே பெரிய இறைவாக்கினர் வந்து உள்ளார் என்று செய்தி எங்கும் பரப்பினர். இறந்தவரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் பெற்றவர் தான் நம் இயேசு!

சுயஆய்வு :

  1. கைம்பெண்ணின் மனநிலையை அறிகிறேனா?
  2. இளைஞன் உயிர்பெற்றதின் கருப்பொருள் அறிகிறேனனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது பரிவிரக்கத்திற்கு ஏற்ப என் வாழ்வு மலர்ந்திடும் வரம் தாரும் . ஆமென்.


www.anbinmadal.org