செப்டம்பர் 17 திங்கள்

இன்றைய நற்செய்தி:

லூக்கா 7:1-10

"இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்"

அருள்மொழி:

இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து," இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
லூக்கா 7:9

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நூற்றுக்குத் தலைவனின் பணியாளரைக் குணப்படுத்துகிறார். இதனுடைய உயிரோட்டமுள்ள நம்பிக்கை அறிக்கை நாம் ஒவ்வொருவரும் திருப்பலியிலும் அறிகிறோம். உலகமெங்கும் ஒலிக்கும் நம்பிக்கை அறிக்கை இதுதான். தலைவன் எத்தகைய மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் படித்தவனாக இருந்தாலும் தன் பணியாளரைக் குணப்படுத்த இயேசு ஒருவரால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கைத் தன் பணியாளர்களிடம் மெசியா என் வீட்டிற்கு வர நான் தகுதியறறவன். ஆனால் நீர் ஒரு வார்த்தைச் சொன்னால் போதும் என் பணியாளர் நலம் பெறுவார் என்றும் நம்பிக்கை அறிக்கை உலகமெங்கும் அனைவர் உள்ளத்திலும் ஒலிக்கும் உயிர் அலைகளாகும். நாமும் அவ்வாறே இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டு இறைவனைச் சங்கமிப்போம்.

சுயஆய்வு :

  1. இறைமகன் மீது எனது நம்பிக்கை எத்தகையது?
  2. நம்பிக்கையின் மேன்மை அறிகின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது வார்த்தை என் வாழ்வின் நம்பிக்கை உளியாகிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org