செப்டம்பர் 16 ஞாயிறு

இன்றைய நற்செய்தி:

மாற்கு 8:27-35

“நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்"

அருள்மொழி :

ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார்.
மாற்கு 8-33

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னை யார் என்று சொல்கிறார்கள் என்று தன் சீடர்களிடம் கேட்கிறார். அதற்கு அவர்கள் சிலர் திருமுழுக்கு யோவான் என்றும் சிலர் எலியா என்றும் வேறு சிலர் இறைவாக்கினர்களின் ஒருவர் என்றும் மக்கள் கூறுகிறார்கள். ஆனால் இறைமகன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று என்றதும் புனித பேதுரு "நீர் மெசியா" என்று உரைத்தார். அதனால் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கண்டித்தார். மேலும் மானிட மகன் துன்பங்கள் பட்டுக் கொலைச் செய்யப்படுவார். ஆனால் மூன்றாம் நாள் மீண்டும் உயிர்த்தெழுவார் என்ற உண்மையை இறைமகன் பதிவுச் செய்கிறார். இதனைக் கேள்வியுற்றப் பேதுரு இயேசுவிடம் தனிமையில் சொல்ல வேண்டாம் என்றதும் இறைமகன் "என் கண் முன்னே நிற்காதே அப்பாலே போ சாத்தானே" என்று கடிந்து கொண்டார். மேலும் கடவுளின் திட்டம் என்ன என்பதை உணராமல் மனிதருக்குரிய மனநிலையில் பேசியது இறைமகனுக்குக் கோபத்தை உண்டாக்கியது.

சுயஆய்வு:

  1. மெசியாவை நான் அறிகிறேனா?
  2. பேதுருவின் உண்மை தன்மையை உணர்கின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, வாழும் கடவுளின் மகன் என்று உண்மையை உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org