செப்டம்பர் 15 சனி
வியாகுல அன்னை நினைவு

இன்றைய நற்செய்தி

யோவான் 19:25-27

"இவரே உம் தாய்! இவரே உன் மகன்!"

அருள்மொழி :

பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.
யோவான் 19

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் தாய் வியாகுல அன்னையாகச் சிலுவையின் அடியில் நின்று அழும் காட்சி மானிடர் அனைவரின் உள்ளத்திலும் துயர்மிகு அன்னையாக நமக்கு விளங்குகின்றாளர். இறைமகன் கள்வரிடம் ஒப்படைக்கப்பட்ட நொடி முதல் அவர் பட்டத் துன்பங்கள் வேதனைகள், கெத்சமெனித் தோட்டம், கல்வாரிப் பயணம், முள்முடித் தாங்கித் தலை, வேதனைச் சாட்டையடி, நெடுகிலும் அவர் தாங்கிய வலிகள். மூன்று முறை முகங்குப்புற விழுந்தது, தன் மகனின் சொல்லொன்னாத் துயரத்தோடு உடன் பயணித்த மரியாள் இறுதியாகச் சிலுவையில் அறைந்து ஐந்து காய வேதனைகள் அனைத்தும் இறுதியாகத் தன் மகனின் இவ்வுலகக் கடமைகளை முடித்துத் தன் தந்தையிடம் அவர் தன் ஆவியை ஒப்படைத்தது யாவும் தன் இதயத்தில் வாங்கியதால் மாமரி இதயம் வெடித்துச் சிதறிய வியாகுலமாமரியாகக் காட்சி அளித்த நாளான இன்று நினைவுக் கூறும் வேளையில் இறை- மனித- உறவில் ஊன்றி வாழ்வோம்.

சுயஆய்வு:

  1. இவரை உன் தாய் என்பவரை அறிகிறேனா?
  2. இதோ உன் மகன் என்றவரை உணர்கிறேனா?

இறைவேண்டல்:

அன்புள்ள இயேசுவே! வியாகுல அன்னையாக நின் தாயின் மேன்மையை உணர்ந்து வாழும் வரம் தாரும் .ஆமென்.


www.anbinmadal.org