செப்டம்பர் 14 வெள்ளி
திருச்சிலுவையின் மகிமை விழா

இன்றைய நற்செய்தி:

யோவான் 3: 13-17

“பாலைநிலத்தில் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்."

அருள்மொழி :

பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.
யோவான் 3:14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாளை நினைவுக் கூர்ந்து விழா எடுக்கின்றது தாய் திருச்சபை. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த மானிட மகனைத் தவிர வேறு யாருக்கும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலைநிலத்தில் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் சிலுவையில் அறைந்து விண்ணிற்கும் மண்ணிற்கும் உயர்த்தப்பட்டார். எனவே தான் தந்தை அவரை மூன்றாம் நாள் உயிர்த்தெழச் செய்து இவ்வுலகின் மீட்பின் நாயகனாக 40 நாள் வலம் வரச் செய்தார். அனைவரது பாவத்திற்கும் கழுவாயாகத் தன் மகனைப் பலியாக்கினார். எனவேதான் விண்ணவரும் மண்ணவரும் இறைமகனுக்கு மண்டியிடுகின்றனர். எனவே தான் திருச்சிலுவை உயர்த்தப்பட்டது. இது மீட்பின் சின்னம். இதுவே அவரது அனைவரது பாவங்களையும் மீட்கும் உன்னதச் சிலுவை ஆகும்.

சுயஆய்வு :

  1. திருச்சிலுவை உணர்த்துவது யாது?
  2. திருச்சிலுவை மீட்பின் கருவி அறிகிறேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! உம் மீட்பின் சின்னமான சிலுவை என் வாழ்வின் சின்னமாகிடும் வரம் தாரும் ஆமென்


www.anbinmadal.org