செப்டம்பர் 13- வியாழன்

இன்றைய அருள்வாக்கு

லூக்கா 6:27-38

“உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்”

அருள்மொழி :

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்..
லூக்கா 6:36

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பகைவரிடம் அன்பு காட்டுங்கள். உம்மை வெறுப்போருக்கு நன்றி கூறுங்கள் என்கிறார். சபிப்போருக்கும் ஆசி கூறுங்கள். இகழ்ந்து பேசுவோருக்காகவும் இறைவனிடம் கொண்டாடுங்கள் என்றும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள் என்று கூறுகின்றார். அதேவேளையில் அடுத்தவர் நமக்கு என்ன செய்யவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். பகைவருக்கு அன்பு செய்யுங்கள். கடன் கேட்பவர்களுக்குப் பிரதிபலன் பாராதுக் கடன் கொடுங்கள். வலதுக்கைக் கொடுப்பதை இடதுகை அறியாதிருக்கட்டும் யாரிடம் பிரதிபலன் பாராமல் உதவி செய்யுங்கள். உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் அதேபோல் நீங்களும் ஏழைகள் மீது இரக்கம் காட்டுங்கள். உங்களுக்கு மிகுந்த கைமாறு வானக தந்தை அருள்வாராக

சுயஆய்வு :

  1. இரக்கம் என்றால் என்ன?
  2. எனது இரக்கம் பிரதிபலன் பாராததா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே இரக்கமுள்ள இதயத்தை என்னில் பதித்து வாழும் வரம் தாரும் ஆமென்.


www.anbinmadal.org