= arulvakku-11

செப்டம்பர், 11 - செவ்வாய்

இன்றைய அருள்வாக்கு

லூக்கா 6:12-19

"அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டது”

அருள்மொழி :

அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.
லூக்கா 6:19

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு திரளான மக்களுக்குப் பணிவிடைச் செய்கின்றார். அவரைக் கண்டதும் திரளான மக்கள் அவரது இறைவாக்கைக் கேட்கவும் தங்கள் பிணிகளைப் போக்கிக் கொள்ளவும், தீய ஆவிப் பிடித்தவர்களும் அங்குக் கூடித் தங்களைக் குணப்படுத்திக் கொள்ளவும் கூடிவந்தார்கள். இயேசுவிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவரின் பிணிகளும் குணமாயின. அனைத்து மக்களும் அவரைத் தொட முயன்றனர். நான் குணமாவேன் என்ற ஆழ்ந்த நம்பிக்கை நம் ஒவ்வொருவரிலும் உதயமானால் நிச்சயம் மருத்துவருக்கே வேலையில்லை என்பதை உணர்ந்தவர்களாக அவரது வல்லமையைப் பெற்றிட நம்மையே தயார் செய்வோம்.

சுயஆய்வு :

  1. இறைமகனின் ஆற்றலை அறிகிறேனா?
  2. அவரது வல்லமை என்னில் தொட என் முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது வல்லமை என்னில் ஊன்றிடும் நம்பிக்கை என்னில் ஊற்றெடுக்கும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org