arulvakku

ஆகஸ்ட் 31

இன்றைய நற்செய்தி:

லூக்கா 4:16-30

" இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை "

அருள்மொழி:

ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
லூக்கா. 4:24

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சொந்த ஊரான கலிலேயாவின் தன்மையைப் பற்றி விளக்குகின்றார். சொந்த ஊரில் இறைவாக்கினரை எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பதற்கு இஃது ஒரு சான்று. ஆம் அன்பார்ந்தவர்களே, இன்று நாம் வாழும் இடங்களிலும் இறைவார்த்தையின்படி வாழ்கின்றவர்களுக்கும் அதனை அடுத்தவருக்குச் செயல்படுத்தும் போது மக்களின் ஏளனப் பார்வையில் இருக்கின்றனர். இது நாம் காணும் அன்றாடச் செயலாகும். எனவே யார் என்ன சொன்னாலும் இறைமகனின் வார்த்தைகளுக்கேற்பக் கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும். பண்பட்ட நிலமாக இருந்தால் அவை பலன் தரும். வறண்ட உள்ளமாக இருந்தால் அங்கே பற்கடிப்பும், புலம்பலும், அங்கலாய்ப்பும் இருக்கும் என்கிறார் இயேசு.

சுயஆய்வு :

  1. நான் இறைவார்த்தையைப் போதிப்பதில் என் செயல்கள் என்ன?
  2. இதற்காக மனம் வருந்துகின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! என் உள்ளத்திலும் இல்லத்திலும் உமது பிரசன்னம் தேவை என்பதை உணர அருள் தாரும். ஆமென்.


www.anbinmadal.org