arulvakku

ஆகஸ்ட் 27

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 24:42-51

" விழிப்பாயிருங்கள் "

அருள்மொழி:

‘எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்'.
மத்தேயு 24:44

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு விழிப்புணர்வைத் தருகின்றார். எப்படியெனில் நாம் வாழ்கின்ற உலகம் நிலையானதல்ல. எங்கிருந்து வந்தோமோ அதே இடத்திற்கு நமது ஆன்மாப் பயணிக்கும். எனவே நாம் வாழ்கின்ற காலத்தில் எதையெல்லாம் செய்கின்றோமோ அவையே நமது உயிர் பிரிந்தவுடன் தனித்தீர்வையில் போய் நிற்கும். அங்கே நமது இவ்வுலகப் பணிக்கேற்றக் கைம்மாறுக் கிடைக்கும். இந்த நிலையைத் தான் இறைமகன் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார். ஆகையால் நாம் ஒருமித்த மனதினராய் வாழக் கற்றுக் கொள்வோம். அனைத்தும் நல்லவைக்கே என்று இறைப் புகழ்ச்சிப் பாடுவோம். இறைவனில் சங்கமிப்போம். இதற்காகவே நமக்கு இந்த எச்சரிக்கை.

சுயஆய்வு :

  1. நான் எந்த வேளையிலும் உம் பதம் சேரத் தயாரா?
  2. அதற்கான முயற்சிகளை மேற் கொள்கின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! எந்த நேரத்திலும் உம் பாதம் சேரும்வரை நான் உமது ஆசிரைப் பெறும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org