arulvakku

ஆகஸ்ட் 23

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 16:13-20

" மெசியா "

அருள்மொழி:

‘பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாகக் கூறினார்'.
மத்தேயு 16:20

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னை யாரென்று வெளிப்படுத்திய பேதுருவின் வாயிலாக இறைமகன் தன் தந்தையின் மாட்சித் தன்னுள் ஒளிர்வதைக் காண்கின்றார். தான் 'மெசியா” என்று வெளிப்படுத்தியவர் இறைவனே. எனவே தான் இறைமகனைப் பற்றி அறிந்து கொண்ட சீடர்களிடம் தான் யாரென்று மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டாம் என்று கூறுகின்றார். நாமும் இறைமகனின் இறைவார்த்தைகளைப் படித்துத் தியானித்து அதனைச் செயல்வடிவம் கொடுக்க அவரது வார்த்தைகள் நம்முள் ஐக்கியமாக வேண்டும். அப்போது தான் நம்முள் இறைமகனின் மாட்சிமை மிளிரும் என்பது திண்ணம். இதனை ஏற்போம். மெசியாவைச் சந்திப்போம் வாழ்வில்.

சுயஆய்வு :

  1. மெசியாவை என் வாழ்வில் உணர்ந்துக்கொண்டேனா? எப்போது?
  2. அவரை அடுத்திருப்பவருடன் பகிர்ந்துக் கொண்டேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உம்மை உணர்ந்து வாழும் பேற்றினைத் தாரும். ஆமென்.


www.anbinmadal.org