arulvakku

ஆகஸ்ட் 22

இன்றைய நற்செய்தி:

மத்தேயு. 23 : 1-12

" உயர்த்துபவர் தாழ்த்தபடுவர் "

அருள்மொழி:

‘தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப் பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்'
மத்தேயு

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு அன்றைய யூதச் சமுதாயத்தில் மோயீசனின் சட்டத்தைக் கொண்டு அடுத்தவர்களை அதிகாரத்திற்குட்படுத்தி, தாங்கள் மட்டும் எந்த நிலைக்கும் மாறாமல், அடுத்தவர்களையே சாடிக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து இவ்வாறு கூறுகின்றார். அதாவது இன்றைய சமுதாயத்தில் ஒருவர் மற்றவருக்கு விட்டுக் கொடுத்துச் சமத்துவம் காண்பதே இறைமகனின் ஆவல். எனவே அவர் தான் தலைமைப் பண்பைத் துறந்துப் பணிவிடைப் புரிபவராகச் சீடர்களின் பாதங்களைக் கழுவி நமக்குத் தெளிவுப்படுத்தினார். எனவே நாம் இறைமகனின் இறைத்தன்மைத் துறந்து மனிதப் பிறப்பு எடுத்தது இதற்குச் சான்றாகும் என்பதை உணருவோம். எனவே அன்புச் சகோதர சகோதரிகளே, எந்த நிலையிலும் 'தான்” என்ற அகந்தைத் துறந்துத் தாழ்த்திக் கொள்வோம். அப்பொழுது நாம் இறைவன் முன் உயர்ந்து நிற்போம் என்பது உறுதி.

சுயஆய்வு :

  1. நான் 'தான்” என்ற அகந்தையைத் துறந்துப் பணிச் செய்ய மனம் கொண்டுள்ளேனா?
  2. தாழ்ச்சி என்பது என்னில் காட்டும் செயல் என்ன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் என்றும் தாழ்ச்சியுள்ளவனாக வாழ வரம் அருளும். ஆமென்.


www.anbinmadal.org