arulvakku

ஆகஸ்ட் 19

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 19:23-30

" முதன்மை-கடைசியாவர் "

அருள்மொழி:

‘ஆனால் முதன்மையானோர் பலர் கடைசியாவார். கடைசியானோர் பலர் முதன்மையாவர்' என்று அவர்களிடம் கூறினார்.
மத்தேயு 19:30

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இவ்வுலக வாழ்வில் அனைத்திலும் தீய சக்திகளின் ஆதிக்கத்திற்குட்பட்டுத் தான் முதன்மை, எனக்குத் தான் அனைத்து உரிமைகளும் உண்டு என்று பணபலமின்றி வாழும் வறியோர்களை அழுத்தி விடுவார்கள். அவர்கள் ஆன்மீகக் காரியங்களில் கடையோராக இருப்பர். வாழ்கின்ற வாழ்வில் அனைத்துப் பணப் பலத்தோடு முதன்மை வகிப்பர். ஆனால் ஒடுக்கப்பட்டவர்களோ வறுமையின் பிடியிலும் பணத்திலும் மூழ்கிக் கடை நிலையில் உழன்றுத் துன்புறுவோர். இப்படி இரு நிலைகளில் வாழ்கின்றவர்களைப் பார்த்துத் தான் இறைமகன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறுகின்றார். இவ்வுலகில் முதன்மையானோர் விண்ணரசின் முகப்பைக் கூடக் காணமுடியாது. இவ்வுலகில் வறுமையின் கடை நிலையில் இருப்போர் இறையரசில் மாட்சிமைப் பெறுவர் என்கின்றார் இயேசு. எனவே சமத்துவம் காண்போம்.

சுயஆய்வு :

  1. நான் முதன்மையை ஏற்கின்றேனா?
  2. அல்லது கடைசியானவரைக் கவனிக்கின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! என்னைக் கடந்து சென்று அனைவரையும் அன்புச் செய்யும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org