arulvakku

ஆகஸ்ட் 17

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 19:16-22

" பேராசை "

அருள்மொழி:

அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளம் சொத்து இருந்தது
மத்தேயு

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் ஏராளமாய்ச் சொத்துக்களைச் சேமித்து வைத்து முடியுன் என்ற போராட்டத்திலுள்ளவர்களுக்குச் சாட்டையடிக் கொடுக்கின்றார். காரணம் தான் பெற்றுள்ள பணப் பலத்தால் இவ்வுலகை வாங்கிவிட்டோம் இனி இறந்த பின் நிலையாக வாழ்வதற்கு இடத்தை வாங்கும் நோக்கில் அதாவது விண்ணரசை விலைக் கொடுத்து வாங்கிவிடலாம் என்று ஆவலில் இயேசுவைப் பார்த்துக் கேட்கின்றான். ஆனால் இயேசுவோ என் சொத்துக்களை இங்கே வறுமையில் வாடும் வறியாவருக்குப் பகிர்ந்தளித்து விட்டு வா. உனக்கு விண்ணுலகில் கைம்மாறுக் கிடைக்கும் என்கிறார். ஆனால் பேராசையால் எதையுமே பேசவும் செய்யவும் மனமில்லாமல் செல்கின்றான். எனவே நாம் நிலைவாழ்வு என்பதை முதலில் உணர்ந்து அதற்கேற்ப வாழக் கற்போம்.

சுயஆய்வு :

  1. இவ்வுலகின் பணபலமே நிலை என்று வாழ்கின்றேனா?
  2. அடுத்தவருக்குப் பகிர்ந்தளிக்கின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நிலையில்லா இவ்வுலகை நிலையென்று வாழும் மானிடர் திருந்தி வாழ வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org