arulvakku

ஆகஸ்ட் 16

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 15:21-28

" உமது நம்பிக்கை பெரிது, நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் "

அருள்மொழி:

இயேசு மறுமொழியாக அம்மா, உமது நம்பிக்கை பெரிது, நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
மத்தேயு 15:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பிற சமயத்தவரான கானானியப் பெண்ணின் விசுவாசத்தைச் சோதிக்கின்றார். அஃதாவது அவளது பெண்ணுக்குப் பிடித்திருந்த பேயை ஒரு கணத்தில் அவர்கள் ஓட்டியிருக்க முடியும். ஆனால் இந்தச் செய்திக் கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. இறைமகன் யூத மக்களுக்கு மட்டுமன்றுப் படைப்பிலுள்ள அனைத்து மாந்தருக்கும் என்பதே இதற்குச் சான்று. எனவே தான் அவளின் மனநிலை எத்தகையது? அவளது விசுவாசம் இன்றைய சூழலில் வாழும் நமக்கும் அறிவுரையாக அமைந்துள்ளது. எனவே நாமும் சமயங்களைக் கடந்து சென்று பணியாற்ற வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வுச் சான்றாக அமைந்துள்ளது.

சுயஆய்வு :

  1. எனது விசுவாசம் எப்படி உள்ளது?
  2. கடந்து சென்று அனைவரையும் அன்புச் செய்கின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! பெயரளவில் கிறித்துவன் என்று பட்டயம் சூட்டி வாழும் நிலையிலிருந்து செயலில் வாழும் வரம் அருளும். ஆமென்.


www.anbinmadal.org