arulvakku

ஆகஸ்ட் 12

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 18:15-20

" செவிசாய்த்தல் "

அருள்மொழி:

‘அவர்களுக்குச் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும், வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.'
மத்தேயு 18:17

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு அன்பு இரக்கம் உள்ளவர் இறைவன் என்பதை வலியுறுத்துக்கின்றார். எப்படியெனில் தவறு செய்பவர்கள் குற்றத்தை உணர்ந்து மன்னிப்புப் பெறாவிடில் அவர்கள் இறைவனது பரிவிரக்கத்திலிருந்து பிரிந்து போகின்றனர். பலவீன மனிதன் திருந்தவும் வாய்ப்பு அளிக்கின்றார். அன்று எருசலேம் அழிவினின்று தம் மக்களைக் காக்கவே செம்மறியின் இரத்தம் தெளிக்கப்பட்டது. இன்றும் மக்கள் மனந்திரும்ப அருட் சாதனங்களை உருவாக்கியுள்ளார். அதனைத் தகுந்த ஆயத்ததோடு பெற்று வாழ்வில் அடுத்தவரின் நலனின் அக்கரைக் காட்டவுமே நமக்கு அழைப்பு விடுக்கின்றார். மனம் திருந்தி வாழ இறை வர்த்தையையும் நமக்கு அளித்துள்ளார். அதன்படி வாழ நமக்கு ஒரு பொக்கிஷம் விவிலியம். இஃது உயிருள்ளது. ஆற்றல் மிக்கது. இதனைப் படித்துக் கேட்டு அதன்படி வாழ்வோம்.

சுயஆய்வு :

  1. இறைவனின் அன்பு இரக்கம் மேலானது என்பதை உணர்ந்துள்ளேனே?
  2. அதனைக் கேட்க என் செவிகள் கூர்மையாக உள்ளதா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உன் போதனைகளை உமது வார்த்தைகளை என் செவிகேட்டு உய்த்துணரும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org