arulvakku

ஆகஸ்ட் 11

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 18:1-5, 10, 12-14

" விண்ணரசின் மேன்மை "

அருள்மொழி:

‘இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்'
மத்தேயு 18: 4

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இறையாட்சியில் இடம் எத்தகைய மனதுடையோர் தகுதியானவர் என்று மிகவும் ஆணித்தரமாகக் கூறுகின்றார். எப்படியெனில் சிறு பிள்ளைகளைப் போல் குழந்தை மனம் கொண்டவராக, கள்ளம் கபடமற்ற உள்ளத்தினராகவும், ஏற்றத் தாழ்வில்லா மனதையும் கொண்டவர்கள் தான் சிறு குழந்தைகள். எனவே தான் இயேசு, போலி இறைவாக்கினர்கள், வெளிவேடக்காரர்கள், பொன்னாசை, பொருளாசையால் அடுத்தவரை வீழ்த்தித் தான் தான் இவ்வுலகில் அனைத்திற்கும் பெரியவன் என்று மார்த்தட்டி வாழ்கின்ற பெரியோர்களைப் பார்த்துத் தான் இறை மகன் இவ்வாறு கூறுகின்றார். நீங்கள் குழந்தைப் போல் மாறாவிடில் உங்களுக்கு விண்ணரசில் இடமில்லை என்கின்றார். இதனை ஏற்போமா?

சுயஆய்வு :

  1. "நான்"என்ற அகந்தையை விட்டு இறங்கி வருகின்றேனா?
  2. சிறு குழந்தையின் மனம் கொள்கின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நான் எளியக் குழந்தை மனம் கொண்டு வாழ வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org