arulvakku

ஆகஸ்ட் 10

இன்றைய நற்செய்தி:

யோவான் 12:24-26

" “எனக்குக் தொண்டுச் செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்.” "

அருள்மொழி:

“எனக்குக் தொண்டுச் செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டுச் செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்றார்.
யோவான் 12:26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு சீடர்களைப் பார்த்து “ மானிடமகன் மாட்சிமைப் பெறும் நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் மடிந்தால் தான் மிகுந்த பலன் தரும்! ”என்று இறைமகன் நம்மைப் போன்ற அனைவரையும் பார்த்து அழைப்பு விடுகின்றார். அன்று இறைமகன் மனுகுலம் நிறைவாழ்வுப் பெறும் பொருட்டுத் தன்னையே சிலுவைச் சாவின் வாயிலாகக் கையளித்து மீட்பைத் தந்தார். அவ்வாறே கோதுமை மணியைப் போன்று நாமும் அடுத்தவர் நிறைவாழ்வுப் பெறும் பொருட்டுத் தம்மையே இழக்கும் அளவுக்கு இறைவார்த்தையின் மீது பற்றுக் கொண்டு இறை - மனித -உறவில் சங்கமித்திட அழைப்பு விடுக்கின்றார். தமக்காக வாழாமல் அடுத்தவர் வாழ்வுப் பெறும் பொருட்டுத் தம்மையே இழப்போர் நிலைவாழ்வை அடைவர். நானும் அவர்களை இறுதிநாளில் மீட்பேன் என்பதின் கருப்பொருளாக உனக்குத் தொண்டுச் செய்வோர் என்னைப் பின்தொடரடடும் என்று அழைப்பு விடுக்கின்றார்.

சுயஆய்வு :

  1. எனது செயல்பாடுகள் எத்தகையது?
  2. பிறர் நலன் கருதிச் செயல்படுகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது தொண்டராக நான் வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org