arulvakku

ஆகஸ்ட் 8

இன்றைய நற்செய்தி:

மத்தேயு17:14-20

" ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை? "

அருள்மொழி:

‘பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?'
மத்தேயு 17:19

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களின் இயலாமையைக் கண்டிக்கின்றார். காரணம் அவர்கள் இறை மகனின் உடனிருப்பை உணரவில்லை. அதே நேரம் அவர்களுக்குக் குறை விசுவாசம் இருந்தது. எனவே தான் அவரது வல்லமை நம்மிலும் செயல்படும் என்பதைக் கண்டுணர முடியாத நிலை. ஆம் இறைமக்களே! நாமும் இறைவார்த்தைகள் நமக்குள்ளும் இறைமகன் நம்மிலும் நிலைத்து இருக்கும் போது அவரது உடனிருப்பை உணரமுடியும். நம் வழியாக அவரது மாட்சி நம்மில் வெளிப்படும் என்பதை விசுவாசத்தோடு உணருகின்ற போது நாம் எதையும் இயேசுவின் பெயரால் செய்வோம் என்பது உறுதி. எனவே நாம் ஒருமித்த இறைச் சிந்தனை உடையவர்களாக வாழ என்றும் அவரது வார்த்தைகளை வாழ்வளிக்கும். இயேசுவின் முகத்தில் ஏழையின் சிரிப்பில் காண்போம்.

சுயஆய்வு :

  1. என் உள்ளம் முழுவதும் இறைச் சித்தம்! என்பதை உணருகின்றேனா?
  2. உணர்ந்ததற்கு ஏற்ப நான் பக்குவபடுகின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உம்மை என்றும் என் உள்ளத்திலும் இல்லத்திலும், சமுதாயத்திலும் காணும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org