arulvakku

ஆகஸ்ட் 7

இன்றைய நற்செய்தி:

மத்தேயு16:24-28

" பின்தொடர்தல் "

அருள்மொழி:

‘இயேசு தம் சீடரைப் பார்த்து என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்துத் தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்'
மத்தேயு 16:24

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களுக்கு மட்டுமல்ல நம்க்கும் தான் இந்த அழைப்பு எப்படியெனில் சுயநலமின்றிப் பிறர்நலம் பேணுபவராக இருத்தல் அவசியம். இன்றைய சூழலில் எங்குப் பார்த்தாலும் பொன்னாசை, பொருளாசை ஓங்கி நிற்கின்றது. எனவே மனிதன் தன் நிலையை மறக்கின்றான். பலவழிகளில் பொருள் சேர்க்கின்றான். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து இறைமகன் என்னைத் தொடர்பவர்கள் நான் எதையெல்லாம் செய்தேனோ அதையெல்லாம் நீங்களும் செய்யுங்கள். நான் எவ்வாறு அடுத்தவருக்காகப் பாடுகள் பட்டுச் சிலுவைச் சுமந்தேனோ அதே போன்று நீங்களும் அடுத்தவரின் நலனுக்காகத் தன்னலம் துறந்துப் பணிப் பிரதிபலன் பாராமல் செய்யுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார். ஏற்போமா?

சுயஆய்வு :

  1. எனக்கு அடுத்திருப்பவரின் நிலைமையை அறிகின்றேனா?
  2. துணிந்து அவர்களுக்கு உதவிச் செய்கின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உம்மைப் போன்று பரிவிரக்கம் கொண்டவராக மாற வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org