arulvakku

ஆகஸ்ட் 6

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 17:1-9

" அவரது முகம் கதிரவனைப்போல் ஒளிர்ந்தது. "

அருள்மொழி:

‘அங்கே அவர்கள் முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப்போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின'.
மத்தேயு 17:2

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்கள் முன் உருமாறினார். எவ்வாறு? தாபோர் மலையில் இறைவனது குடியிருப்பு. அங்கே மூவொரு இறைவன் பிரசன்னம் நிகழ்ந்தது. அதனை உணர்ந்து - கண்டு மெய் மறந்த நிலையில் சீடர்கள் பேசினர். பேதுரு இதே இறைப் பிரசன்னத்தில் நிலைத்திருக்க விரும்பினார். எனவே அங்கே கண்டக் காட்சி நமக்கும் வலியுறுத்துவது என்னவென்றால் நாம் வாழும் இந்தக் காலத்தில் மூவொரு இறைவன் நம்முடன் இருக்கின்றார். நாம் பெற்றுக்கொண்ட அருள் அடையாளங்கள் வழியாக என்பதை உணர்வோம். அந்த உடனிருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் இவ்வுலகில் நாம் நல்லது, தீயது எது என்று உய்த்துணர்ந்து வாழ வேண்டும். சாத்தானின் செயல்களுக்கு இடம் கொடாமல் நிலையற்ற இவ்வுலக வாழ்வைக் கடந்தோமானால் நிலை வாழ்வை நிச்சயம் பெறுவோம். மூவொரு இறைவன் நம்முடன் இருப்பது திண்ணம் என்பதை உணர்வோம்.

சுயஆய்வு :

  1. மூவொரு இறைவனின் உடனிருப்பைப் பெற எனது முயற்சி என்ன?
  2. என் வாழ்வில் நான் காணும் மாற்றம் என்ன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நீர் பெற்றுக் கொண்ட இறைப் பிரசன்னத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ளும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org