arulvakku

ஆகஸ்ட் 5

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 15:21-28

" அம்மா, உமது நம்பிக்கைப் பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் "

அருள்மொழி:

இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கைப் பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
மத்தேயு 15:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு கானானியப் பெண்ணின் நம்பிக்கையைப் புடமிட்டுப் பார்க்கின்றார். காரணம் இஸ்ரயேல் குலத்தாரில் சாதி - சமயம் என் பிளவுபட்டுப் போயிருந்தவர்களை ஒன்றிணைக்கவே இறைமகன் மண்ணகம் வந்தார். என்பதற்கு இந்தக் கானானியப் பெண் சான்றாக அழைகின்றார். அவரது பெண்ணிற்குப் பேய்பிடித்துள்ளது. இதை மெசியாவால் ஓட்டமுடியும் என்ற ஆழ்ந்த விசுவாத்தோடு வந்தவரே இந்தப் பெண். சமயம் கடந்தும் பணி ஆற்றினார் என்பதற்கு இந்த உரையாடல். “பிள்ளைகளுக்குரிய உணவை நாய்களுக்குப் போடுவது சரியா?” என்றதும் எசமான் மேசையிலிருந்து சிதறி விழும் உணவை நாய்கள் தின்னுமே” என்ற வரிகள் உயிருள்ள நம்பிக்கையை ஊட்டும் வரிகளாக அமைகின்றது. எனவே தான் இறைமகன் சாதி - சமயம் -இனம் - மொழிகளால் பிளவுபட்ட மனுகுலத்தைச் சீர்தூக்கிப் பார்க்கின்றார். அனைவரும் ஒரேமற்மையின் ஆடுகள் இருப்பினும் அவளது நம்பிக்கையைச் சோதித்து ”அம்மா உம் நம்பிக்கைப் பெரிது. நீ விரும்பியவரே உமக்கு நிகழட்டும் என்று நல் ஆசானாகப் பதிவு செய்கின்றார்.

சுயஆய்வு :

  1. எனது நம்பிக்கை எத்தகையது?
  2. நான் கடந்து சென்ற பணிச் செய்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது வருகையின் நோக்கம் அறிந்துப் பணிச் செய்திடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org