arulvakku

ஆகஸ்ட் 4

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 15:1-2,10-14

" மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும் "

அருள்மொழி:

வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது: மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும் என்றார்.
மத்தேயு 15:11

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தி வெறும் சட்டங்களைப் பிடித்துக் கொண்டு கடவுளின் கட்டளைகளை மீறுவோருக்குப் பெரும் சாட்டையடி. இந்தப் பரிசேயர்களும் மறைநூல் வல்லுனர்களும் இதைத்தான் செய்தார்கள். இயேசுவின் சீடர்கள் கைகழுவாமல் உண்பதை மோயீசனின் சட்டப்படித் தவறு என்கிறார்கள்.
கைகழுவி உண்பது என்பது நல்ல பழக்கம்தான். இதையெல்லாம் செய்யக் கட்டாயப்படுத்தும் இந்தப் பரிசேயர்கள் பிறர் அன்பு, இரக்கம், மன்னிப்பு ஆகிய கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவில்லை. ஆகவேதான் இயேசு அவர்களை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் மற்றும் குருட்டு வழிகாட்டிகள் எனச் சாடுகிறார். இவர்களுடைய வழிகாட்டுதல் மற்றவர்களைப் பாதாளத்துக்கு இட்டுச்செல்லும்.
கிறிஸ்தவர்களாகிய நாம் அன்றாட வாழ்வில் பிறருக்குக் கிறிஸ்துவை அறிவிக்கும் நல் மாதிரிகளாகச் செயல்பட நம் வாழ்கையே நற்செய்தியாக மாற ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம்.

சுயஆய்வு :

  1. மனிதரைத் தீட்டுப் படுத்துவது எது? அறிகிறோனா?
  2. என் வார்த்தைகளை அடுத்திருப்பவரைத் தீட்டுப்படுத்துகிறதா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உம் வார்த்தைகளைப் புரிந்து கொண்டு அதன்படி நடந்திட வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org