arulvakku

ஆகஸ்ட் 2

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 14:13-21

" நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் "

அருள்மொழி:

இயேசு அவர்களிடம், ; அவர்கள் செல்ல வேண்டியதில்லை: நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ; என்றார்.
மத்தேயு 14:16

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் தன் அன்புப் பிள்ளைகளுக்கு அவர்களைப் பெற்ற தாய் உணவு இல்லாத நிலையில் தான் எப்படி அவர்களின் பசியைப் போக்க முயல்வதைப் போல் இயேசுவின் அன்பு பொழியப்படுகின்றது. இதை நாம் உணரவே இந்தப் புதுமையை இயேசு உணர்த்துகின்றார். எப்படியெனில் 'தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ?' பிறந்த குழந்தையைத் தாய் மறப்பாளோ? என்ற வரிகளுக்கேற்ப அன்று தந்தை தன் மகன் வழியாகத் தன் மக்கள் மீது கொண்ட வேட்கையால் அவர்களை அழிவினின்று காத்திடத் தன் சாயலை மனிதரும் அறிந்திடும் வண்ணம் மரியின் வழியாகத் தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்பி அவர்களின் தாகம், பசி, பிணி அனைத்தையும் ஒரு தாய் தேற்றுவது போல் இறைமகன் வழியாகத் தீர்த்து வைத்தார் என்பது தான் உண்மை. எனவே நம்முள் இறைமகனின் வார்த்தைகளும், நாம் அவரிலும் சங்கமித்து வாழ்வோமானால் என்றுமே பசியே இராது. தாகமும் இராது.

சுயஆய்வு :

  1. நான் இறைவார்த்தைகளை இதயத்தில் தாங்கியுள்ளேனா?
  2. ஆம் என்றால் என் பசியை நான் உணர முடியாது என்பதை உணர்கின்றேனா?

இறை வேண்டல்:

உம் வார்த்தைகள் என் வாழ்விலும் செயலிலும் அடுத்தவரின் நலனிலும் தடம் பதித்திட வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org