அருள்வாக்கு இன்று ++ arulvakku-25

ஆகஸ்ட், 25 - சனி
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 23:1-12

“தம்மைத்தாமே தாழ்த்துபவர் எவரும் உயர்த்தப் பெறுவர்"

அருள்மொழி:

இயேசு, "தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துபவர் எவரும் உயர்த்தப் பெறுவர்” என்றார்.
மத்தேயு 23:12

வார்த்தை வாழ்வாக:

உள்ளத்தைத் தாழ்த்துவது ஒன்றே ஆண்டவரின் அருளை அடையும் வழி. உள்ளத்திலே தற்பெருமையும் சுயநலமுமே கொண்டு வாழ்ந்தால், ஆண்டவர் புறந்தள்ளி விடுவார். பரிசேயர், மறைநூல் அறிஞர்கள் ஆண்டவருக்கு முன்னிடம் தராமல் தங்களையே உயர்த்திக் கொண்டனர். மக்கள் தரும் மதிப்பு போதும் என இறுமாப்பு கொண்டார்கள். 'ஆண்டவர் அவர்களைத் தாழ்த்துவார் என இயேசு எச்சரிக்கிறார். மதிப்பும் மரியாதையும் கேட்டுப் பெறுவதல்ல. மாறாக நம் வாழ்வைப் பார்த்துத் தானாக வருவது.

சுயஆய்வு :

  1. நாம் நம் வாழ்வில் மற்றவர்களுக்குப் பணிந்து பொறுப்புடன் வாழ்கின்றோமா?

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! எல்லாம் உமக்கே சொந்தம், எல்லா மகிமையும் மாட்சியும் உமக்கே என உணரும் மனதினை வரமாகத் தாரும். ஆமென்.


www.anbinmadal.org