அருள்வாக்கு இன்று ++ arulvakku-23

ஆகஸ்ட், 23 - வியாழன்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 22:1-14

"தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்"

அருள்மொழி:

இயேசு, "அழைப்புப்பெற்றவர்கள் பலர். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்" என்றார்.
மத்தேயு. 22:14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், திருமண விருந்து உவமையை இயேசு விளக்குகிறார். நற்கருணை விருந்து இறையரசின் முன் அடையாளம். நாம் அனைவரும் வாழ்வு பெற தன்னையே நற்கருணையில் இயேசு வழங்குகிறார். இவ்விருந்தில் நமது பங்கு என்ன? ஞாயிற்றுக்கிழமை திருப்பலிகளில் கூட பங்கேற்காமல் பலவித சாக்கு போக்குகளைச் சொல்லக்கூடிய மனிதர்கள் ஒருபுறம். அப்படியே பங்கெடுத்தாலும் பாதி திருப்பலியில் எவ்விதத் தயாரிப்புமின்றி பங்கேற்கும் மனிதர் மறுபுறம். ஆண்டவரின் விருந்துக்கு அழைக்கப்பட்ட நாம் பேறு பெற்றவர்கள். அவரது திருவிருந்தை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் நமது விருப்பம்.

சுயஆய்வு :

  1. அழைக்கும் இறைவன் கட்டாயப்படுத்தவில்லை. விரும்பி வருபவர்கள் தகுந்த தயாரிப்போடு வருவோமா?

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! உமது அழைப்பை உதாசீனப்படுத்தாமல், தகுதியுள்ள விதத்தில் நற்கருணை விருந்தில் பங்கெடுக்க வரம் தாரும்.ஆமென்.


www.anbinmadal.org