அருள்வாக்கு இன்று ++ arulvakku-22

ஆகஸ்ட், 22 - புதன்
இன்றைய நற்செய்தி:

லூக்கா 1:26-38

"அருள் நிறைந்த மரியே வாழ்க! ”

அருள்மொழி:

வானதூதர், "அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார்.
மாற்கு 6:37

வார்த்தை வாழ்வாக:

“உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று கூறிய ஒற்றை வாக்கியம், அன்று முதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசியாய் முடி சூடப்படும் வரை இறைவழியே என் வழி என நடந்தார் அன்னை மரியா. இவரது கொள்கை அயலான் அன்பு, தாயன்பு, பரிந்து பேசுதல், கீழ்ப்படிதல், எல்லாம் இறைச்சித்தம் என ஏற்று வாழ்ந்த - இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கின்ற உமது வாழ்வு பெரியதம்மா.

சுயஆய்வு :

  1. நாம் இறந்தோமானால் எத்தனை நாட்கள், எத்தனைப் பேர் நம்மை நினைவில் வைத்திருப்பர்?

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! நாங்கள் அனைவரும் அன்னை மரியின் அடிச்சுவட்டில், மரியாளின் தூண்டுதலில் வாழ வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org