அருள்வாக்கு இன்று ++ arulvakku-21

ஆகஸ்ட், 21 - செவ்வாய்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு. 19:23-30

“செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது”

அருள்மொழி:

இயேசு, “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.
மத்தேயு 19:24

வார்த்தை வாழ்வாக:

உவமைகள் வாயிலாகப் பேசிய இயேசு, இப்போது பழமொழியையும் சொல்கிறார். "ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” எனவும், “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்” எனவும் கூறுகிறார். உதவி என்று வருவோருக்கு நாம் வைக்கும் முதல் கேள்வி, “உனக்கு உதவுவதால் எனக்கென்ன கிடைக்கப் போகிறது?" ஆதாயம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை . இயேசு சொன்ன பதிலையும் ஆராய்ந்து பார்ப்போம்.

சுயஆய்வு :

  1. இலாபம் இல்லாமல் இழப்பதால் என்ன பயன்?

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! அனைத்தையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து, அகமகிழ்ந்து வாழ வரம் தாரும். ஆமென்.www.anbinmadal.org